News

Follow Us

ஒரு திரைப்படத்தில், கிணத்தைக் காணோம் என்று நடிகர் வடிவேலு செய்த காமெடி செம ஹிட். அந்த காமெடியை தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தது, டிரெண்டிங்காக மாறியிருக்கிறது.

ஓட்டுப் பதிவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘கோவை தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் காணாமல் போயிருக்கிறது. குறிப்பாக கவுண்டம்பாளையம் அங்கப்பா வாக்குச்சாவடியில் ஒட்டுமொத்தமாக 830 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆகவே, பிரச்னை இருக்கும் இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை சொல்வது உண்மையா என்று கேட்டறிந்தோம். அங்கப்பா அகாடமி (சிபிஎஸ்இ), கவுண்டம்பாளையம் பள்ளியில் மொத்தம் 8 வாக்குச்சாவடி உள்ளது அந்த எந்த வாக்குச்சாவடியிலும் 850 பேரை நீக்கவில்லை இரண்டு வாக்குச்சாவடியில் மட்டுமே 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர். எட்டு  வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து நீக்கப்பட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை 112 மட்டுமே. ஆனால் புதிய வாக்காளர் சேர்ப்பு 129 பேர்’ என்று தெரிவிக்கிறார்கள்.

கோவையில் தோல்வி உறுதி என்று தெரிந்துகொண்டதால் இப்படி பொய்யான குற்றச்சாட்டு கூறுவதாக அண்ணாமலையை பல கட்சியினரும் கிண்டல் செய்கிறார்கள். அண்ணாமலை போலவே வேட்பாளர் வினோஜ் பி செல்வமும் 1 லட்சம் வாக்குகளைக் காணவில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையத் தலைவர் அதிகாரி, சத்யபிரதா சாகு, ’’செப்டம்பர் முதல் மார்ச் 20ம் தேதி வரை சரிபார்த்தல் சேர்த்தல், நீக்கல் செய்துள்ளோம். அப்போதே சரி பார்த்துக்கொண்டிருந்தால் கடைசி நேரத்தில் இது போன்ற நிலை வராது’ என்று கூறினார்.

அதாவது பூத் கமிட்டி ஏஜெண்ட் இல்லாத காரணத்தாலே இப்படி பேசுகிறார்கள் என்று கூறியிருக்கிறார் சாகு. வாய்க்கு வந்ததை அடித்துவிடுவதே அண்ணாமலைக்கு வேலையாகிப் போனது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link