News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

இறக்கை கட்டும் கேஸ் விலை…. தேர்தலுக்கு வெயிட்டிங்

அமெரிக்கா ஆரம்பித்துவைத்த போர் காரணமாக மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதட்டமான சூழல் கச்சா எண்ணெய் விலையில் கடுமையான உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய நிலையில் உலகளாவிய எண்ணெய் விலைகள் சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. இது இந்தியா போன்ற இறக்குமதி செய்யும் நாடுகளை நேரடியாகப் பாதிக்கிறது.
நாட்டில் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல், எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ சிலிண்டரின் விலையை ரூ.195-க்கும் மேல் உயர்த்தியுள்ளன. இந்த முறை வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலைகள் மாற்றமின்றி இருப்பது, பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
ஆனால், இந்த புதிய விலைகள் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிகங்களை மிகவும் பாதித்திருக்கிறது. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது.
ஐந்து மாநிலத் தேர்தலுக்காகவே வீட்டு கேஸ், பெட்ரோல் விலை உயராமல் மத்திய அரசு கட்டுப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் கடுமையான விலையேற்றம் நிச்சயம் என்கிறார்கள்.
அமெரிக்கா செய்த தப்புக்கு இந்தியர்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
தயாராக இருந்துக்கோங்க மக்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link