News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

திருமாவளவனுக்கும் திமுகவுக்கும் இடையில் ஒவ்வொரு நாளும் விரிசல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. திருமாவளவனின் பேச்சும் நடவடிக்கையும் திமுக தலைமையைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

முதலில் திருமாவளவன் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடுவதாக அவரே அறிவித்தார். அதோடு, வரும் ஆண்டுகளில் தமிழக அரசியல் மாறுபடும் என்பதால் மாநில அரசியலுக்குத் திரும்புவதாகத் தெரிவித்தார். இதை தலைமை ரசிக்கவில்லை. நேரடியாக மிரட்டிய பிறகே போட்டியில் இருந்து பின்வாங்கினார். அதோடு அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது.
அடுத்த விவகாரம் பொற்கொடி. சென்னையிலுள்ள திரு.வி.க.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் படுகொலை செய்யப்பட்ட பட்டியலினத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியின் வெற்றிக்கு திருமாவளான் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விஷயத்திலும் திமுக உஷ்ணமானது. இதையடுத்து விசிகவின் வெற்றிக்கு திமுக எந்த உதவியும் செய்யாது. பணம் மற்றும் ஆதரவு கிடைக்காது என்று எச்சரிக்கை செய்யப்பட்டதாம். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார் திருமா. திமுகவை எதிர்க்கவும் முடியாமல் ஆதரிக்கவும் முடியாமல் தடுமாறுகிறார்.
சிறுத்தைகள் நிலவரமோ அதைவிட கலவரமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link