News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்த பிறகும் திமுக ஆட்சியை இழந்துவிட்டது. இந்த தோல்விக்கு சென்ஸி தலைமுறையே காரணம் என்று திமுக முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, புதிய தலைமுறையை இழுக்கும் வகையில் செயல் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர்கள் முன்வந்து எழுச்சியோடு நடத்திய சென்ஸி திமுகவினர் சந்திப்பு நடந்துள்ளது. இது குறித்து திமுகவினர், ‘’இந்த சந்திப்பு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மாபெரும் வெற்றியாக மாறியுள்ளது.

நமது கழகத்தின் எதிர்காலம் துடிப்பான இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது என்பதை இந்தச் சந்திப்பு உணர்த்துகிறது. இதேபோன்ற அரசியல் விழிப்புணர்வு கூட்டங்கள் இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். உங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினரின் துணையோடு நமது கழகம் முன்பைவிடப் பலமடங்கு வலிமையோடு மீண்டெழும். மீண்டு வருவோம்’’ என்று குரல் கொடுக்கிறார்கள்.

இதற்கு தவெகவினர், ‘’கட்சியை வளர்க்கிறேன்னு கருணாநிதி மானாட மயிலாட நடத்தினார். கனிமொழி சங்கமம் நடத்தினார். உதயநிதி நடத்துனாரு கார் ரேஸ் நடத்துனார். இப்போது கருத்துக்கூட்டம் நடத்துகிறார்கள். இதெல்லாம் ரொம்ப பழைய டெக்னிக். இனிமேல் செல்லுபடியாகாது. விஜய்யை எதிர்க்க ஸ்டாலினும், உதயநிதியும் போதவே போதாது. யூத் இன்பநிதியை கொண்டுவாங்க, அவர்தான் சரியா இருக்கும்’’ என்கிறார்கள்.

அதுவும் சரிதான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link