Share via:
விஜய்யின் தேர்தல் பிரசாரப்படமாக தொடங்கப்பட்ட ஜனநாயகன் இன்று
வரை ரிலீஸ் ஆகவில்லை. திமுக ஆட்சிக் காலத்திலேயே நெட்டில் வெளியாகிவிட்டது என்றாலும்
திரையைத் தொடவில்லை.
இந்த நிலையில் இயக்குனர் ஹெச்.வினோத் கூறியிருக்கும் கருத்து சினிமாவிலும்
அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இது குறித்து, ‘’ஜனநாயகன்
ரிலீஸ் என்னுடைய கைகளில் இல்லை. படத்தின் சிக்கல் தொடர்பான உண்மைகளைச் சொல்லும் அளவிற்கு
எனக்குத் தைரியம் இல்லை அப்படியே எனக்குத் தைரியம் இருந்தாலும், அந்த உண்மைகளைத்
தற்பொழுது அப்படியே வெளியிடும் தைரியம் உங்களுடைய ஊடகங்களுக்கு இருக்காது. படம் வரும்போது
பார்ப்போம்’’ என்று சூசகமாகப் பேசியிருக்கிறார்.
ஹெச்.வினோத்தின் பேச்சு
தற்பொழுது சமூக வலைதளங்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதத்தையும்,
பரபரப்பையும் கிளப்பியுள்ளது. இன்னமும் அதற்கு சென்சார் கிடைக்காதது பலருக்கும் சந்தேகத்தைக்
கிளப்பி வருகிறது.
அப்படியென்றால், ஜனநாயகன் பிரச்னைக்கு உண்மையான காரணம் என்னவாக
இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் நேரடியாக தலையிட்டு நிறுத்தியிருக்க
வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் முதல் நபர் மு.க.ஸ்டாலின்,
இரண்டாவது நபர் பிரதமர் மோடி.
மூன்றாவது நபர் யார் தெரியுமா..? அவர் முதல்வர் விஜய். இந்த உண்மையைத்தான்
தாங்கிக்கொள்ள முடியாது என்று சொல்கிறாரா ஹெச்.வினோத்.
சீக்கிரம் சொல்லுங்கப்பா.
