News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் நேற்று இரவு பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சென்னை இசிஆர், முட்டுக்காடு பகுதிகளிலும் கடுமயான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் சமரசம் பேச வந்த தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏவை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு இரவில் தூங்க கூட முடியவில்லை என தாய்மார்கள் புகார் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மின்வெட்டு விஷயம் அறிந்து ஆவேசமான விஜய், ‘’யாருடா மின்சாரத்தைக் கட் பண்றது?’’ என்று கேட்டுள்ளார். அதற்கு வழக்கம்போல் ஆளுக்கு ஒரு அதிகாரியை கை காட்டியிருக்கிறார்கள். எல்லோரையும் டிரான்ஸ்ஃபர் செய்ய உத்தரவு போட்டிருக்கிறாராம்.

இந்த விஷயம் குறித்து பேசும் மாரிதாஸ், ‘’தமிழகம் இதுவரை காணாத கொடூரமான மின்வெட்டு எதிர் கொள்கிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் சிரமத்திற்கு ஆளாக்கட்டுள்ளனர். இதுவே விஜய் தந்தை தாய் கரண்ட் இல்லாமல் இருந்தால் சும்மா இருப்பாரா? இல்லை விஜய் வீட்டில் ஒரு 3 மணி நேரம் கரண்ட் கட் சகித்துக் கொள்வாரா? இந்த லாட்டரி வாயன் இனி அறிவிக்கப்படாத மின்வெட்டே இருக்காது என கூறினான். அடுத்த நாளில் இருந்து இன்று வர எப்போது போகும் எப்போது வரும் என தெரியவில்லை. இரவு நேர மின்வெட்டு உச்சத்தில் உள்ளது.

இதற்கு காரணம் தகவல், புள்ளி விவரம் கேட்டால் ஒருத்தன் தர தயாராக இல்லை இந்த ஆட்சியில்… ஆனால் மடைமாற்றுவதற்கு அந்த ஊழல் இந்த ஊழல் கண்டு பிடிச்சுட்டோம் திருப்பரங்குன்றம் மலை தீபம் என உருட்டிட்டு இருக்கானுங்க.. அரசியல் பண்ணி அப்படியே திசை திருப்புகிறார்கள்…’’ என்று கொதித்துள்ளார்.

அதேநேரம், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிடப்பட்டது பெரும் சலசலப்பை ஏர்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பாஜகவின் நாராயணன், ‘’ஸ்மார்ட் திட்டத்தைக் கைவிடுவது மோசமான முடிவு. மிகப்பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தை மேலும் பெரும் நஷ்டத்தில் மூழ்க வைத்து விடும் அபாயம் உள்ளது.

ஒவ்வொரு இணைப்புகளிலும் துல்லியமான கணக்கை எடுத்து கட்டணத்தை உறுதி செய்யும் இந்த திட்டத்தால் மக்களுக்கு பெரும் பயன் விளைவதோடு, அரசின் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்புகள் சரிசெய்யப்படுவதோடு மின்பகிர்மான கழகத்தின் வருவாயையும் சீராக உயர்த்தும். இந்த திட்டத்திற்கு ஒரே நேரத்தில் பெரும் முதலீடு தேவைப்படுவதாக அரசு சொல்வது உண்மைக்கு புறம்பானது…’’ என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார்.

ஏதாவது செய்யுங்க விஜய் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link