Share via:
முதலமைச்சர் விஜய் அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகளை மட்டும் நம்பாமல்,
அவ்வப்போது மாறுவேடத்தில் நேரடியாக மக்களிடையே சென்று அவர்களின் குறைகளையும், மற்ற
பிரச்சினைகளையும் ஆய்வு செய்து வருகிறார் என்று தவெக ஆனந்த்ஜித் பேசிய விவகாரம் செம
வைரலாகி வருகிறது.
இவர் பேசியது முழு உண்மை என்று விஜய் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
எனவே அவர்களும் இப்போது ராத்திரி ரவுண்ட்ஸ் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதோடு
தினமும் இரவு நிறைய இடங்களில் மின் தடை ஏற்படுகிறது. இதற்கு காரணம், அங்கெல்லாம் விஜய்
ரவுண்ட்ஸ் போகிறார் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்.
அது மட்டுமின்றி, ‘எங்கள் விஜய் எல்லா இடத்திலும் இருப்பார், இரவு
முழுக்க ரவுண்ட்ஸ் போகிறார். அதனால், யாரும் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று
உஷார் படுத்துகிறார்கள்.
இன்னும் சிலர் விஜய் மட்டும் மாறுவேடத்தில் ரவுண்ட்ஸ் செல்வதில்லை,
கூடவே த்ரிஷாவையும் கூட்டிச் செல்கிறார். அப்போதுதான் பெண்களுக்கான பிரச்னைகளையும்
கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள்.
இந்த பில்டப்களைக் கேள்விப்பட்டு விஜய் நிஜமாகவே இரவு ரவுண்ட்ஸ்
கிளம்பிவிடக் கூடாது என்பதுதான் குடும்பஸ்தர்களின் வேதனை. ஏனென்றால், இப்போது பிள்ளைகள்
பகலில் மட்டுமே விஜய் பைத்தியமாக இருக்கிறார்கள். நிஜமாகவே விஜய் திரியத் தொடங்கினால்
பொடுசுகளும் இரவு வெளியே ரவுண்ட்ஸ் கிளம்பிவிடுவார்கள். விஜய் என்று நினைத்து யாரையாவது
கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துவிடுவார்கள் என்ற பயம்தான் பெரியவர்களுக்கு இருக்கிறது.
அம்மா தாயே, பிச்சை போடுங்க என்று வீட்டுக்கு வெளியே குரல் கேட்டால்
உடனே விரட்டி விடாதீர்கள். உற்றுப் பாருங்கள். அவர் விஜய்யாக இருக்கலாம்.