Share via:
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நிழலாக இருந்த கடம்பூர் ராஜு,
உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் விஜய் கட்சியில் இணைவதற்கு பனையூர் அலுவலகம்
வந்திருப்பது, அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
இன்று நல்ல நாள் என்பதால் அதிமுகவைச் சேர்ந்த 5 முன்னாள் அமைச்சர்கள்,
ஏழு முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக, அமமுக மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஏராளமானவர்கள்
இன்று அதிமுகவில் இருந்து தவெகவில் இணைகின்றனர்.
இவர்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன்
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி
சங்ககிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜூ
வீரபாண்டி முன்னாள் எம்எல்ஏ ராஜமுத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜூ
கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம்
சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன்
ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் ஆகியோர் இன்று தவெகவில்
இணைவதற்கு பனையூர் அலுவலகம் வந்து காத்திருக்கிறார்கள். இவர்களில் முன்னாள் அமைச்சர்கள்
மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என தனித்தனியே செட்டில்மெண்ட் நடந்துவிட்டதாகவும்,
கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம்.
தூய சக்தியின் நிறம் மாறிவருகிறது.
