Share via:
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக உறுப்பினர்கள் மொத்தமே
14 லட்சத்து 67 ஆயிரத்து 125 வாக்குகள் மட்டுமே வாங்கினார்கள். ஆனால், அண்ணாமலையின்
இது நம்ம இயக்கத்தில் இதுவரை 15 லட்சம் பேர் சேர்ந்துவிட்டனர். அதனால் பாஜகவை அண்ணாமலை
முந்திவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் ஃபயர் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்று அவரது ஆதரவாளர்கள், ‘’15 லட்சம் பேர் நமது இயக்கத்தில் இணைந்துவிட்டார்கள்…
ஆனால் மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரையும் நாம் சென்றடைந்துவிட்டோமா? இந்த சாதனையை
சமூக வலைதளங்களில் பகிர்ந்து மட்டும் கொண்டாடாமல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும்
புதிய உறுப்பினர்களை இணைத்து கொண்டாடுவோம்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் இருந்தும் பதிவு செய்வது எப்படி
என்று தெரியாத மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நமது இயக்கத்தில் இணைப்போம். காலணியை
அணியுங்கள். கைப்பேசியை எடுத்துக்கொள்ளுங்கள். களத்திற்கு வாருங்கள். நமது இயக்கத்தில்
புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்குவோம். உங்கள் உறுப்பினர் சேர்க்கை அனுபவங்கள்,
புகைப்படங்கள் மற்றும் முகாம் படங்களை உங்கள் பெயர், மாவட்டம், தொகுதி, ஊராட்சி/வார்டு
விவரங்களுடன் நமது தலைமைய அலுவலக வாட்ஸ் ஆப் எண் +91 8122942929 க்கு அனுப்புங்கள்.
ஒரு தெருவும் விடக்கூடாது. ஒரு நல்ல மனிதரையும் தவறவிட்டுவிடக்கூடாது. இந்த உறுப்பினர்
சேர்க்கை இயக்கத்தை ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றி, புதிய வரலாறு படைப்போம்’’ என்று
ஆவேசம் காட்டுகிறார்கள்.
ஆனால் பாஜகவினரோ, ‘’அண்ணாமலை கொடுக்கும் கணக்கு எல்லாம் வழக்கம்
போல் தப்பு. அவரால் பாஜக வளரவில்லை. அவருக்கு பாஜகவில் ஆதரவும் இல்லை. அதனால்தான்,
அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, எஸ்.ஜே.சூர்யா, வினோஜ் செல்வம் ஆகிய
யாருமே பாஜகவில் இருந்து விலகி அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இன்னமும் தன்னந்தனி மனிதராக
நிற்கிறார் அண்ணாமலை.
இப்போது அவருக்கு பணம் செலவழிக்கப் போவது யார்..? எப்படி அடுத்தகட்ட
நடவடிக்கை மேற்கொள்வார் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. அதோடு 15 லட்சம் என்பதெல்லாம்
புரூடா. வழக்கம்போல் பொய்யாக காட்டப்படும் கணக்கு மட்டும்தான். ஒரு லட்சம் கூட உண்மையில்
சேர்ந்திருக்காது’’ என்கிறார்கள்.
சீமானுக்கும் அண்ணாமலைக்கும் சரியான போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
