News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

காவலர்கள் வீரத்துக்கு விஜய் சல்யூட்… காவலர் நாள் வாழ்த்து

மெட்ராஸ் மாவட்டத்துக்கு காவல் துறை தோற்றுவிக்கப்பட்ட நாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருப்பது, போலீஸ் வட்டாரத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இன்று விஜய் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் […]

வாத்தி கம்மிங்… உதயநிதி நாளை ஓட்டம்..?

நாளை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பதிலுரை இடம்பெறுகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை என்றாலே விஜய்க்கு அதிர்ஷ்டமான நாள் என்றும் திமுகவுக்கு பீடை என்றும் தவெக தொண்டர்கள் பின்னிபெடலெடுக்கிறார்கள். இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’மே 4, திங்கட்கிழமை! வெற்றித் தலைவர் வாகை சூடி வரலாறு திரும்பிய நாள். கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டு வரலாறு படைத்த நாள். ஏறிய ஒவ்வொரு மேடையிலும் சொல்லிச் சொல்லி அடித்த அடியில், இறுமாப்புடன் “இருநூறு வெல்வோம்” என்றவர்கள் இடிந்துபோய், இயல்பைத் தொலைத்து அலைகின்றனர் […]

உதயநிதிக்கு திங்கள் கிழமை பசிக்கும்ல… தவெக செம கலாய்

  திங்களன்று உளறல்நிதி சட்டப்பேரவையை விட்டு ஓடாமல் இருப்பாரா? என்று தவெகவினர் இப்போதே கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.   இதுகுறித்து பேசும் தவெகவினர்,’’கல்யாணம், காது குத்து நிகழ்ச்சிகளில் பேசுவது போல் சட்டப்பேரவையிலும் உளறிவிட்டு, “உடனே பதில் வேண்டும்” என அடம்பிடித்த உதறல்நிதியே! பல நாட்களாக ஸ்கிரிப்ட் தயார் செய்து வந்து பேசும் பவளவிழாப் பாப்பாவுக்கு, சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் என்னவென்றே தெரியாதா? இல்லை யாரும் சொல்லித் தரவில்லையா? காலையில் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டு, மதியமானதும் ஓட்டமெடுக்கும் […]

கருணை காட்டாமல் டாஸ்மாக்கை மூடுங்க விஜய். அரசை மிரட்டும் ஊழியர்கள்

டாஸ்மாக்கில் பணிபுரியும் 257 ஊழியர்கள் மது பாட்டலுக்கு கூடுதலாக பணம் வாங்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை நேற்றும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மூடப்பட்ட கடைகளை தற்காலிக மாற்று பணியாளர்களை கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில […]

விஜய்யுடன் மோதினால் இப்படித்தான். ரெய்டில் சிக்கிய கே.என்.நேரு.

சட்டமன்றத்தில் திமுகவின் கடந்த கால ஊழல்களை தவெக அமைச்சர்கள் பேசியபோது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து, ‘’சும்மா ஊழல், ஊழல் சொல்லாதீங்க இருந்தா நடவடிக்கை எடுங்க’’ என்று சத்தம் போட்டுப் பேசினார். அதற்கு பதிலடி கொடுப்பது போன்று இன்று நேருவுக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்கிறது. எங்கள் தளபதி விஜய்யுடன் மோதினால் இப்படித்தான், திங்களன்று சட்டசபைக்கு வருவாரா நேரு என்று தவெக தொண்டர்கள் கிண்டல் செய்கிறார்கள். பல்வேறு நிறுவனங்களை மிரட்டி கட்சிக்கு பார்ட்டி […]

தூய்மைப் பணியாளர்களுக்கு விஜய் வாக்குறுதி. அமைச்சர்கள் பேச்சுவார்த்தை வெற்றி

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு 15 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அரசியலாக்க நினைத்தவர்களுக்கு சவுக்கடி தரும் வகையில், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு தூய்மைப் பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், ‘’”எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு தேவையானதை […]

இந்துக்களுக்கு செம ஹேப்பி. விஜய் வாழ்த்து செய்தி

முதல்வராக ஸ்டாலின் இருந்த வரையிலும் இந்துக்கள் பண்டிகைக்கு எந்த வாழ்த்து செய்தியும் தரமாட்டார். ஆனால், இஸ்லாமியர், கிறிஸ்தவப் பண்டிகைகளுக்கு மறக்காமல் வாழ்த்து சொல்வார். ஆனால், விஜய் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், கிருஷ்ண ஜெயிந்திக்கு வாழ்த்து கூறியது, இந்துக்களிடம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இன்றைய வாழ்த்து செய்தியில் விஜய், ‘’அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை […]

விஜய் பெஸ்ட் பிரதமர் சாய்ஸ்… வியக்கவைக்கும் காரணங்கள்

தமிழக முதல்வர் விஜய் அடுத்து இந்தியப் பிரதமராகிறார் என்று தவெகவினர் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார்கள். இது, காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல்காந்தியே சரியான தேர்வு என்கிறார்கள். இந்த நிலையில் ராகுல்காந்தியைவிட, விஜய்யே பெஸ்ட் சாய்ஸ் என்று சோஷியல் மீடியாவில் நிறைய காரணங்களை பட்டியல் போடுகிறார்கள். இந்த காரணங்களைப் பார்த்தாலே விஜய் பெஸ்ட் சாய்ஸ் என்பது புரியும் என்கிறார்கள். இதோ அந்த காரணங்கள். 1. ராகுல் காந்தி வாரிசு அரசியல். அதாவது நேரு குடும்பத்தின் ஐந்தாம் […]

தமிழுக்கு விஜய் சிறப்பு தீர்மானம்… மோடி என்ன செய்யப்போகிறார்..?

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக ஆக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதுகுறித்து பேசிய முதல்வர் விஜய், ‘’தமிழ் வெறும் மொழி அல்ல; நமது உயிரும் அடையாளமும் ஆகும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கணமும் இலக்கியமும் கொண்ட தமிழ், இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் செம்மொழி. தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான தமிழுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாகப் […]

விஜய் இன்றைய ஸ்பெஷல். தலைமைச் செயலகம், ஸ்போர்ட்ஸ் சிட்டி.

ஒவ்வொரு நாளும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் புதிய தலைமைச் செயலகம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்பு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சட்டபேரவை கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் இன்று பேசுகையில், ‘’தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு சுற்றுலாவை விரிவுபடுத்தவும் தமிழ்நாட்டில் ஒரு புதிய […]