News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

விறுவிறுப்பாக சனிக்கிழமை தோறும் நடந்துவந்த விஜய் தேர்தல் பிரசாரம் கரூர் சம்பவத்தை அடுத்து இழுத்து மூடப்பட்டுவிட்டது. டிசம்பர் மாதமாவது தொடங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஆசைப்பட்ட விஜய்க்கு மீண்டும் காவல் துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வரும் டிசம்பர் 4ம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய மூன்று பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டம் மூலம் மக்களை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

இந்த மனு மீது உடனடியாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பரிசீலைனை மேற்கொண்டனர். டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவல நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதேபோல, டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நினைவு தினத்தையொட்டி, அடுத்து வரும் நாட்களில் மாநகரம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

எனவே, தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டும் என்பதால், விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு டிசம்பர் 4ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேறு ஒரு நாள் கேட்கப்படும் என்கிறார்கள். எந்த தேதி கொடுத்தாலும் காவல் துறை ஏதேனும் மறுப்பு சொல்லத்தான் போகிறார்கள்.

தேர்தல் கூட்டணி முடிவு செய்யப்பட்டு விஜய் தனித்து நிற்பது உறுதியாகும் வரை இப்படித்தான் இழுத்தடிக்கப்படுவார்கள் என்று புலம்புகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link