News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழ்த் தேசியவாதிகள் பல ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்தனர். இதன் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாள் என விஜய்யின் தவெக அரசு அறிவிப்பு செய்திருப்பதற்கு பலத்த பாராட்டு கிடைத்துவருகிறது.  

இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’தமிழ்நாட்டின் வரலாற்றை சுருக்கமாகச் சொன்னால், நவம்பர் 1 – மாநிலத்தின் உருவாக்க வரலாறு. ஜூலை 18 – தமிழ்நாடு என்ற பெயரின் வரலாறு. ஜனவரி 14 – அந்தப் பெயர் அதிகாரப்பூர்வமான நாள்.

இந்த மூன்றில்  தமிழ்நாடு தினமாக எதைக் கொண்டாட வேண்டும்? மாநிலம் உருவான நாளையா? பெயர் சூட்டுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றிய நாளையா? அல்லது பெயர் அதிகாரப்பூர்வமான நாளையா?

ஒரு குழந்தை பிறந்த நாளைத்தானே அதன் பிறந்தநாளாகக் கொண்டாடுவோமே தவிர  குழந்தைக்குப் பெயர் வைத்த நாள் அல்லது பிறப்புச் சான்றிதழ் வாங்கிய நாளை கொண்டாட மாட்டோம். அதனாலே முதல்வர் விஜய்  நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாகக் கொண்டாடும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 1ம் தேதியை தமிழ் மண்ணின் பெருமையையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், விஜய் தலைமையிலான தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கத்திப்பாரா ஸ்கொயர், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா என 6 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம், கூத்து, தோல்பாவைக் கூத்து, சிலம்பாட்டம், கிராமியப் பாடல்கள் என 11 வகையான நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன.

 நம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவும், மறைந்து வரும் பாரம்பரியக் கலைகள் மீண்டும் மக்களிடம் சென்றடையவும், இளைய தலைமுறையினர் நம் மண்ணின் கலைச் செல்வங்களை அறிந்து கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. தமிழ்நாடு நாள் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல..,நம்முடைய மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியவற்றைப் பெருமையுடன் நினைவுகூரும் நாள்.

தமிழுக்கு மதிப்பளிக்கும் விஜய்க்கு ராயல் சல்யூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link