News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளிடம் 400 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் அவரது நெருங்கிய தோழி சண்முகப்பிரியா பேர் அடிபட்டது.  அதேபாணியில் கே.என்.நேருவின் 634 கோடி ரூபாய் ஊழலில்  சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் மாட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

திருச்சி தில்லைநகரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனை நடத்தினார்கள். 2,538 பொறியாளர் பணியிட நியமனங்களில்  634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சி டெண்டர் மூலமாகவும் நிறைய சம்பாதித்தாகவும் அதன் மூலம் வந்த ஊழல் கமிஷன் பணத்தில்  துணிக்கடை, ஸ்வீட்கடை, ஹோட்டல் என நிறைய நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதன் மூலம் ஏக போகத்திற்கு வாழ்ந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

 கே என் நேருவின் சகோதரர் கே என் ரவிச்சந்திரன் உதவியாளர் கவிபிரசாத் மற்றும் செல்வமணி மூலம் நிறைய பணம் ஜனனி அசோக்குமார், ஷபானா போன்ற நிறைய தமிழ் சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் செலுத்தப்பட்டு அதன் மூலம் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 ஜனனி அசோக்குமார் மற்றும் அவரது நெருங்கிய தோழி செம்பருத்தி நாடகப்புகழ் சின்னத்திரை நடிகை ஷபானாவையும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற சின்னத்திரை நடிகைகளையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கே.என்.நேரு நகராட்சி நிர்வாக 634 கோடி ஊழல் வழக்கில் விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்து அனைவரின் வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது.

யார் இந்த ஜனனி அசோக்குமார்?

 ‘மாப்பிள்ளை’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘செம்பருத்தி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். தொடர்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்

அதேபோல், ‘செம்பருத்தி‘ தொடரின் மூலம் ரசிகர்களிடம் தனி அடையாளம் பெற்றவர் ஷபானா. இவருக்கு இப்போதும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இத்தகையச் சூழலில் இவரது பேரும் இந்த ஊழல் வழக்கில் இடம்பெற்றிபதாக வெளியாகி இருக்கும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திராவிட அமைச்சர்களின் ஜல்சா வேலைகள் தொடர்ந்து அம்பலமாவதால் தமிழக அரசியல் சூடாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link