Share via:
விஜய் வெற்றி அடைய வாய்ப்பு இல்லை, கட்சி ஜெயிக்காது, ஆட்சி அமைக்க
முடியாது என்பது போன்ற ஹேஸ்யங்களை எல்லாம் விட்டுத்தள்ளிவிட்டு, அட்டகாசமாக 6 மாத காலத்தை
நிறைவு செய்ய இருக்கிறார்.
இந்த முதல் ஆறு மாத கால ஆட்சியில் யாராலும் மறக்கமுடியாத, மறுக்கமுடியாத
35 சாதனைகள் மட்டும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் விரிவாக்கம்.
2. 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்.
3. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்.
4. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டித் திட்டம்.
5. பெண்களின் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் சிறப்புப் படை.
6. போதைப்பொருள் தடுப்புக்கு 65 புதிய காவல் நிலையங்கள்.
7. தகுதியுள்ள மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுச் சேலை.
8. ஆண்டுக்கு 3 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கும் அறிவிப்பு.
9. 10,000 ஏழைப் பெண்களுக்கு இலவசக் கறவை மாடுகள்.
10. 30,000 கிராமப்புறப் பெண்களுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள்.
11. 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம்.
12. மாற்றுத்திறனாளிகளுக்கு துணையுடன் இலவசப் பேருந்துப் பயணம்.
13. தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 20% கடன் மானியம்.
14. கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு.
15. ஆட்டோ குறைந்தபட்சக் கட்டணம் ₹50 ஆக உயர்வு.
16. அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.
17. அரசு வேலைவாய்ப்புகளுக்கான வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு.
18. பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்.
19. விளையாட்டு வீரர்களுக்கு ₹1.77 கோடி உதவித்தொகை.
20. 8 புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல்.
21. சமூகநீதிக் கணக்கெடுப்பு ஆணையம் அமைக்க ஒப்புதல்.
22. அரசு ஐ.டி.ஐ.களில் நவீன மின் ஆய்வகங்கள் திறப்பு.
23. 673 இளநிலைப் பயிற்சி அலுவலர்கள் நியமனம்.
24. கிலோ ₹30-க்கு சன்னரக அரிசி வழங்கும் அறிவிப்பு.
25. மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கும் துளி இயக்கம்.
26. வெற்றி 150 வேலைவாய்ப்புத் திட்டம்.
27. வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத் திட்டம்.
28. காலி மதுபானப் பாட்டில்களுக்கு ₹10 வைப்புத்தொகை முறை.
29. சாலைப் பராமரிப்பில் புதிய விதிமுறைகள்.
30. நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக அறிவிப்பு. அறிவிப்புகள் மட்டுமல்ல, அவற்றின் செயல்பாடும் மக்களைச் சென்றடைகிறதா என்பதையும் கண்காணிக்கிறார்கள்.
31. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும்
பாலியல் குற்றங்கலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012ன் கீழ் பதிவு செய்யப்பட்டும்
வழக்குகளை விசாரிக்க 26 சிறப்பு நீதிமன்றங்கள்.
32. இந்து சமய அறநிலையத்துறைக்கு தனி துறை அந்தஸ்து. இந்து சமய
மற்றும் அறக்கட்டளைகள் துறை – Hindu Religious and Charitable Endowments
Department”* என்ற புதிய தனித்துறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
33. போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி
நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
34. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புரட்சியாக
குடும்ப வருமான வரம்பு ₹1.20 லட்சத்தில் இருந்து ₹2.50 லட்சமாக
உயர்வு. மேலும், காப்பீட்டு தொகை ₹5 லட்சத்தில்
இருந்து ₹25 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது
35. அனைத்து புதிய ரோடுகளும் மில்லிங் செய்யப்பட்டு, ரோடின் உயரம்
அதிகரிக்காமல் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அரசு உத்தரவு
தமிழகத்துக்கு நல்ல காலம் என்பது போன்று, இனியும் சாதனைகள் தொடரட்டும்.

