Share via:
விஜய் ஆட்சிக்கு வந்தால் என்னென்னமோ மாற்றம் நடக்கும் என்று கூறப்பட்ட
நிலையில், மின்வெட்டு எக்கச்சக்க சிக்கலாக மாறிவருகிறது. இந்த நிலையில் ஆட்களை வேலைக்குப்
போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆட்கள் நியமனம் நடைபெற்றது. இதில் குரூப் போட்டோ
எடுத்துக்கொண்டது, கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து இறங்கிவந்து பணி ஆணை வழங்கியதும்
பரபரப்பாகியுள்ளது.
இன்று டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் விஜய்
பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார். குறிப்பாக நிறைமாத கர்ப்பிணியான அட்சய லட்சுமிக்கு
விஜய் மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று பணி ஆணையை வழங்கினார். அதோடு, பணி நியமன ஆணை
பெற்ற அனைவருடனும் சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
இந்த நியமனங்கள் மூலம் மின்வாரியம் புதுப்பொலிவு பெறும் என்றும்,
மின்வெட்டுப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் உடனடியாக மின்வாரியத்திற்கு தேவைப்படுகிறார்கள். ஆட்கள்
இல்லாததால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே இருந்திருக்கின்றன. இந்த
பிரச்சனைகளைச் சரி செய்ய மின்வாரிய துறையில் காலிப்பணியிடங்கள் வேகமாக நிரப்பப்பட்டு
வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று மின்வாரிய துறை அதிகாரிகளுக்கான பணி நியமன
ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம், மின்சாரத் துறைக்கு நாளை வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்
என்று சொல்லப்படுகிறது. மின்சாரம் தொடர்ந்து வழங்கவேண்டும் என்றால், மின்சாரக்கட்டணம்
உயர்த்தப்பட வேண்டும் என்று சொல்வதற்காகவே இந்த மின்வெட்டு என்கிறார்கள்.
நிஜமா விஜய்.?
