Share via:
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?’’ என்று சட்டமன்றத்தில்
ஸ்டாலினை கிண்டல் செய்தார் விஜய். அதோடு, அப்பாவைக் காணோம் என்றும் டயலாக் பேசினார்.
இதை திமுக வசமாகப் பிடித்துக்கொண்டது. நேற்று முதல் பொண்டாட்டியக் காணோம், அப்பாவைக்
காணோம் என்று ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு கோர்ட்டில் ஒருவர் கணவரைத் தேடிக்கொண்டு இருக்கிறார்
என்று உதயநிதி செய்தியாளர்களிடம் நேரடியாகவே அட்டாக் செய்தார். இவற்றுக்கு எல்லாம்
பதிலடி கொடுப்பது போன்று விஜய் பர்த் டே கேக் வெட்டும் படத்தை வெளியிட்டு, ‘பொண்டாட்டி
இல்லைன்னா என்ன, நான் இருக்கிறேன்’ என்று தாமதமாக படத்தை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 22 பர்த்டே கொண்டாட்டத்துக்கு ஜூன் 23 நைட்டு 7.23-க்கு போஸ்ட்
போடுகிறார் த்ரிஷா. இது, பொண்டாட்டியைக் காணோம் விவகாரத்தை திசை திருப்பும் செயல் என்று
அவரது ரசிகர்களே கொதிக்கிறார்கள்.
ஏனென்றால், அமோனியா வாயு விபத்தால் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டுவதற்கு
மறுத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தார் விஜய் என்று மீடியாக்களுக்கு செய்தி
கொடுக்கப்பட்டது. வெளியே கேக் வெட்டாமல் வீட்டில் மட்டும் கேக் வெட்டலாமா, எல்லாமே
நடிப்பா விஜய் என்று கொதிக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’சார்
நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?* நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால்
முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது… வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை
Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல….
’’5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல” என்று பஞ்ச்
அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின்
பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள்
அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க…. Reels அ விட்டுட்டு
Reality க்கு வாங்க’’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.