Share via:
தவெக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும்
தாய் மாமன் சீர் என்று தங்க மோதிரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சீர் என்று கூறப்படுவதும்,
அதற்கு ஏகப்பட்ட படிவங்கள் நிரப்பவேண்டியிருப்பதும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தாய் மாமன் தங்க மோதிரம்
வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டது. இத்திட்டத்தின்
கீழ் பிறக்கும் 4 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
ஆனால், அரசு குறிப்பிட்ட 94 மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு
மட்டுமே இந்த திட்டடத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அரசு
மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் 54% குழந்தைகளுக்கும், மாவட்ட தலைமை மற்றும்
உப மருத்துவமனையில் பிறக்கும் 37% குழந்தைகளுக்கும் ஆரம்ப சுகாதாரம் நிலையத்தில் பிறக்கும்
ஒன்பது சதவீத குழந்தைகளும் பயன்பெறுவார்கள்.
இந்தத் திட்டத்தில் கீழ் பயன்பெறும் கர்ப்பிணிகள் ஆரம்பத்தில்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனைகளில்
பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மற்றும்
இன்ன பிற சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து குழந்தைகளும்
பயன்பெறுவார்கள் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள், வீட்டில் பிறக்கும்
குழந்தைகளுக்கு சீர் கிடையாது. மேலும், இதற்கு ரேசன் கார்டு முதற்கொண்டு ஏராளமான படிவங்கள்
கொடுக்கவேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து
குழந்தைகளுக்கும் தலா 1 கிராம் மோதிரமாக வழங்கப்பட உள்ளது. இன்றைய நாளில் 1 கிராம்
தங்கத்தின் விலை 14,200 ரூபாய். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு
நாளில் சுமார் 1,230 குழந்தைகள் பிறக்கின்றனர். அதாவது, அரசு மருத்துவமனைகளில் மட்டுமே
60% குழந்தைகள் பிறக்கின்றன. இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு ஆண்டில் சுமார்
4.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. ஆக, ஒரு குழந்தைக்கு 1 கிராம் தங்கம் கொடுத்தால்,
4.5 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் 450 கிலோ தேவைப்படும். இதன் ஒட்டுமொத்த மதிப்பு
652 கோடி ரூபாய். இத்தங்கத்தை மோதிரமாக செய்ய வேண்டும் என்பதால் சேதாரம், செய்கூலி,
ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை சேர்த்து 700+ கோடி ரூபாய் ஆகிறது. இது எல்லாம் விஜய் சொந்தப்பணமா
என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால், கஜானா காலி என்று அறிவித்த பிறகு எப்படி
கொடுக்கிறார்..?
எப்படி என்றாலும் பரவாயில்லை, எல்லா குழந்தைகளுக்கும் மோதிரம்
குடுங்க முதல்வரே…