News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

தவெக ஆட்சியமைத்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்துவருகிறது. இந்த நிலையில் நாளை கவர்னர் வருவதையொட்டி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் அரசு பொறுப்பேற்று ஒரு வாரமாகியும் இன்னும் துறை வாரியாக அமைச்சர்கள் நியமிக்காததால், கோப்புகள் நகராமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அரசு நிர்வாகம் முடங்கியதோடு விவசாய துறையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக பதவியேற்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிக்கப்படும். ஆனால், இன்னமும் எந்த அமைச்சருக்கும் அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கப்படவில்லை.

காங்கிரஸ், விசிக மற்றும் அதிமுக பிளவு அணிக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் குழப்பம் இன்னமும் நீடிக்கிறது. இந்நிலையில் மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேகர். இன்றிரவு சென்னை வருகிறார்.  நாளை ஒருநாள் மட்டுமே இங்கு தங்குகிறார்.

அவர், நாளை இரவே மீண்டும் அண்டை மாநிலமான கேரளாவுக்குத் தனது பயணத்தைத் தொடர உள்ளார். வெறும் ஒரு நாள் மட்டுமே அவர் சென்னையில் இருக்கிறார் என்பதால் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரை, முதலமைச்சர் விஜய் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

அப்படியே நடக்கட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link