Share via:
சவுக்கு சங்கருக்கு கடந்த ஆட்சியில்
சிக்கல் எழுந்த நேரத்தில் எல்லாம் உடனடியாக ஆதரவு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது
சிறையில் இருந்து வந்திருக்கும் சவுக்கு சங்கர் நேரடியாக எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை
காப்பாற்ற முடியாது. வேறு ஒருவர் பொதுச்செயலாளராக வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்.
இதற்கு முழு காரணம் வேலுமணியும் அவரை பின்னே இருந்து இயக்கும் பாஜகவும் தான் என்று
எடப்பாடி பழனிசாமி டீம் கொதித்துபோய் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு 72 வயதாகிவிட்டது என்று, அதை ஒரு குறையாகச்
சொல்கிறார் சவுக்கு சங்கர். இது குறித்து பேசும் எடப்பாடி ஆதரவாளர்கள், ‘’சவுக்கு சங்கர்
மீது ஏப்ரல் 9, 2026 அன்று குண்டர் சட்டம் பாய்ந்தது. தவெக அரசு அமைந்த சில வாரங்களில்
அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலையானார். இது திட்டமிட்ட நடவடிக்கை.
சிறையிலிருந்து வெளிவந்த சில நாட்களில் சவுக்கு சங்கர் சி.வி.சண்முகம்
வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
வழக்கறிஞர் & பொருளாதார தொடர்பு சவுக்கு சங்கரின் வழக்குகளை சிவி சண்முகம் மற்றும்
எஸ்.பி.வேலுமணி தரப்பு வழக்கறிஞர்கள் கையாண்டதாகவும், பொருளாதார உதவி வழங்கப்பட்டதாகவும்
அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சவுக்கு சங்கர் சிறையில் இருந்தபோது, அவரது ஊடகம் முடக்கப்பட்டபோது
மற்றும் அவரது தாயார் மறைந்தபோது ஆதரவு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது அவருக்கு
எதிராக பேட்டி கொடுப்பது நன்றி கெட்ட செயல்.
தவெக அரசு தனது சிறுபான்மை அரசை தக்கவைக்க அதிமுகவுக்குள் உள்ள
அதிருப்தி முகாமை பயன்படுத்தி கழகத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு சவுக்கு
சங்கரை பயன்படுத்துகிறது. வேலுமணி, பாஜக, விஜய் எல்லோருமே ஒரே டீம்’’ என்கிறார்கள்.
நன்றி மறப்பது நன்றன்று.
