Share via:
முதல்வர்.ஜோசப் விஜய் தொடங்கிவைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
விழா குறித்து எக்கச்சக்க சர்ச்சைகள் வெளியாகியிருக்கிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை
வெளியிட்டார் விஜய். அதில் தமிழ் எழுத்துக்கள் தலைகீழாக இருந்தது, மிகப்பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து நாம் தமிழர் குழுவினர், ‘’ஒரு கோமாளி அரண்மனைக்குச்
சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை, அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும் என்பார்கள்.
அதற்கு உதாரணமாக சிங்கப்பெண் விழா நடந்திருக்கிறது.
சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவுல, “சிங்கப்பெண்ணே..
சிங்கப்பெண்ணே..”னு வாசிக்க ஆரம்பிச்ச தமிழ்நாடு காவல்துறையின் பேண்ட் பிரிவு
அடுத்த கட்டமா, “ஆளப் போறான் தமிழன்” பாட்டை வாசித்தர்கள். இது என்ன தமிழ்நாடு
காவல்துறையா? ராஜ் நையாண்டி மேளக் குழுவா? அடுத்து, டாடி மம்மி வீட்டில் இல்லை..”னு
வாசிக்கறதுக்குள்ள யாராவது நிறுத்த சொல்லுங்களேன்
அதேபோல் தனிமனித ஒழுக்கம் இருந்தால்தான் இந்த சமூகம் மாறும் என்று
விஜய் பேசியிருக்கிறார். தனி மனித ஒழுக்கம் பற்றி முதல்வர் விஜய் பேசுவதுதான் கேலி
செய்வது போல் உள்ளது. மனைவியுடன் விவாகரத்து ஆகும் முன்னதாகவே, வேறு ஒரு நடிகையுடன்
ஊர் சுற்றுவதைத்தான் தனி மனித ஒழுக்கம் என்று சொல்கிறாரா..?’’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேபோல் அதிமுகவினர், ‘’கஷ்டபட்டு தளம் அமைத்து அஸ்திவாரம் போட்டு
வீட்டைக் கட்டி எழுப்புவது ஒன்று, அடுத்தவர் கட்டி முடித்த வீட்டிற்கு பால் காய்ச்சுவது
மற்றொன்று, ஆனால், அடுத்தவர் வீட்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டு, அதை சொந்த வீடு போல
ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது இன்னும் புதுமையானது. இதைத் தான் இன்று சிங்கப்பெண் சிறப்புப்படை
என்ற பெயரில் செய்துள்ளார் ப்ரோ..!!
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா
Patrol என அஇஅதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை
கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது.
யூனிபார்ம் மாற்றி, Drone ஷாட் வைத்ததில் மட்டும் தான் உங்க சினிமா
Expertise தெரிந்தது (அந்த AI வீடியோ பிழை இல்லாமல் ஒழுங்கா பண்ணியிருக்கலாம்
Though…) ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வில் பேசிய இன்றைய முதலமைச்சர், இரண்டு முறை இந்த
நிகழ்வை ஏற்பாடு செய்து ரத்து செய்தது ஏன் என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மேலும், போதைப்பொருளை ஒழித்தால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியும் எனவும்,
போதைப்பொருளை ஒழிப்பது கடினம் எனவும் கூறியுள்ளார். அப்புறம் எதுக்கு ப்ரோ இந்த சிங்கப்பெண்
அதிரடிப்படை?
பெண்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு மூலக் காரணம் என நீங்களே கூறும்
காரணத்தை ஒழிக்காமல், பல பெண் காவலர்கள் உள்ளடக்கிய ஒரு சிறப்பு படையை எதற்கு பணித்துள்ளீர்கள்?
நீங்கள் அடுத்த சில நாட்களுக்கு ரீல்ஸ் போட்டு புரமோசன் செய்ய கண்ணியமிகு காவல் படையின் பெண் சிங்கங்கள்
என்ன பகடையா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
