Share via:
விஜய் அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரசை
சேர்ந்த 2 பேர் மற்றும் தலெகவை சேர்ந்த 10 பேர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகக்
கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சரவையில் திருமா இடம் பெற வேண்டும் என விஜய்
விரும்புகிறார் என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
அதே நேரம், ‘’அதிமுகவினருடன் தோழமையோடு இருப்போம்; அடுத்த செயல்திட்டம்
என்ன என சி.வி.சண்முகம் முடிவு செய்வார்’’ என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதில் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘அதிமுக ஆதரவுக்காக
ஒரு கோஷ்டியை சேர்த்து கொள்ளும் முடிவுக்கு தவெக சென்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை
செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமாவளவனுக்கு அமைச்சர் பதவிக்கு ஆசை இருந்தாலும், கம்யூனிஸ்ட்
கட்சியும் இணையும்போது தானும் இடம் பெறுவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறார். எனவே,
இப்போதைக்கு திருமாவளவன் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இப்போதைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அமைச்சரவையில் 9 அமைச்சர்கள்
மட்டும் பொறுப்பேற்று இருக்கின்றனர். இந்த வார இறுதியில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்
செய்யப்பட இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.
மேலும் உயர்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆதரவு கொடுத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது ஏற்கனவே ஊழல் வழக்குகள் இருக்கின்றன.
எனவே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது இமேஜை பாதிக்கும் என்று கருதுகிறார்.
அவர்கள் அதிமுகவில் இருந்து விஜய் கட்சிக்கு
வந்தாலும், அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகள் அதரவு கிடைக்கவில்லை என்றால் தேவைப்படும்
என்பதற்காகவே அதிமுக உடைக்கப்பட்டது. கண்டிப்பாக 32 பேரை அழைத்துவந்து அதிமுக என நிரூபணம்
செய்துவிடுவார் என்று நம்பப்பட்டது. அப்படி அழைத்துவரவில்லை என்பதால், எதற்கும் பொறுப்பேற்க
முடியாது என்று விஜய் நழுவுகிறாராம்.
விஜய்யை நம்பி கட்சியையும் பறி கொடுத்துவிட்டு நட்டாற்றில் நிற்கிறது
வேலுமணி டீம்.