Share via:
திமுக ஆட்சி குறித்து எந்த வில்லங்கச் செய்திகளும் வெளியிடக்கூடாது
என்பதற்காக அவ்வப்போது விளம்பரங்களை அள்ளிக்கொடுப்பது ஸ்டாலின் ஸ்டைல். அதே பாணியில்
இப்போது விஜய்யும் சிங்கப்பெண் திட்டத் தொடக்கவிழாவுக்கு எக்கச்சக்கமாக செலவு செய்திருக்கிறார்.
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க முடியாமல்
அரசு தள்ளாடுகிறது. அதோடு, தமிழகம் முழுக்க சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. எனவே,
இதனை எல்லாம் மறைக்கும் வகையில் பத்திரிகை, மீடியாவுக்கு அரசு சார்பில் விளம்பரம் அள்ளிக்
கொடுக்கப்படுகிறது. அரசு பணத்தை இப்படி அள்ளிவிடுவதுதான் மாற்றம் தரும் அரசியலா என்ற
கேள்வி எழுகிறது.
விஜய் என்ன பேசினாலும், செயல்படுத்தினாலும் அத்தனையும் முழுமையாக
செய்தியாகிவிடுகிறது. பிறகு எதற்கு இப்படி விளம்பரம்…? ஆளும் கட்சி மீடியாவைக் கண்டு
அஞ்சுகிறதா..?
இன்று விஜய் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண்
பாதுகாப்பு படை தொடங்கிவைக்கிறார். சிங்கப்பெண் பாதுகாப்பு படை பேருந்து நிலையங்கள்,
ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் போன்ற பொது இடங்களில்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி
வைப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த பாதுகாப்பு படை சீருடை மட்டுமின்றி, சிவில் உடைகளிலும் பெண்
காவலர்கள் நடமாடி குற்றவாளிகளை ரகசியமாகக் கண்காணித்துக் கைது செய்வார்கள். பொது இடங்கள்,
பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களுக்கு அருகில் பெண்களைக்
கேலி செய்பவர்கள் மற்றும் அத்துமீறலில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க இந்த அதிரடிப் படையினர்
24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவர். இத்திட்டத்தின்கீழ்பெண் காவலர்களுக்குச் சிறப்பு
தற்காப்புப் பயிற்சிகள் மற்றும் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு களமிறக்கப்படுகிறார்கள்.
இனி, குற்றங்கள் குறையட்டும்.

