News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

திமுக கூட்டணியில் ஜெயித்துவிட்டு தவெக கூட்டணியில் அமைச்சர் பதவி வாங்கியிருக்கும் திருமாவளவனை திமுக உடன்பிறப்புகள் துவைத்தெடுக்கிறார்கள்.

இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’திருமா கடைந்தெடுத்த அரசியல்வாதி என்பதைவிட கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி. கடந்த 6 மாதங்களாக அவர் பெட்டிகளுக்கும், புது சோபாக்களுக்கும் அடிமை ஆகிவிட்டார். தன்னை ஒரு சாதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லி வந்த அவர் இன்னும் அந்த சாதி சாக்கடையில் இருந்து வெளியே வரவில்லை.

அவர் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார். ரஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார். திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி அல்ல அரசியல் வியாதி’’ என்கிறார்கள்.

திருமாவளவன் திட்டமிட்டு திமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகச் சொல்லும் திமுகவினர், ‘’இதுக்குதான் ஷாநவாஸ்க்கு சீட் கொடுக்கவில்லை. இதுக்குதான் எம்.பியை ரிசைன் பண்ணி எம்.எல்.ஏக்கு நிக்கிறேன் என்று சொன்னது. இதுக்குதான் எலக்சன் முன்னாடியே தொங்குசட்டசபைனு வாயவிட்டது. இதைத்தான் “எங்க ஆட்கள் சரியாக வேலை செய்யவில்லை”னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது. இதுக்குதான் ஜோசியக்காரன் நியமனம் வரைக்கும் ஜால்ரா போட்டது. இதுக்குத்தான் அதிமுக – திமுக கூட்டணி என்று பேட்டியில் பொய் சொன்னது. அப்புறம் கிசுகிசுதான் பேசினேன் என்று வெட்கமே இல்லாமல் சமாளித்தது. காங்கிரஸாவது எலக்சனுக்கு அப்புறம் துரோகி. இந்தாளு கூடவே இருந்து ‘துரந்தர்’ வேலை பாத்திருக்கிறார்’’ என்று கொதிக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினரும், ‘’தமிழ்நாட்டின் உட்சபட்ச சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் திருமாவளவன். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி சென்னையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை 18 ஆம் தேதி முடித்துக் கொண்டார்.

உண்ணாவிரதப் போராடத்தை முடித்துக் கொண்ட பின்னர் திருமாவளவன் பேசுகையில், காங்கிரசுடன் இனி எந்தவிதமான உறவையும், எக்காலத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வைத்துக்கொள்ளாது. காங்கிரஸ் கட்சியை விட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 மடங்கு பலமானது என்றார், காங்கிரசை ஒழிப்பேன் என்றும் ‘வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவேன்’ என்று சபதமிட்டார்.

ஆனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே காங்கிரசோடு கூட்டணி வைத்து மேடையில் மைக் பிடித்து ‘அன்னை சோனியா வாழ்க’ என காங்கிரஸ் தொண்டரை விட விசுவாசமான அடியாளாய் மாறி கூவினார். ஒரு பக்கம் ஈழ ஆதரவு வேஷம் போட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் ஈழ எதிர்ப்பாளர் ஹிந்து ராமுக்கும், கே.எஸ். அழகிரிக்கும் விருது கொடுப்பார். ஒரு பக்கம் அணு உலை எதிர்ப்பு பேசுவார் இன்னொரு பக்கம் அணு உலை திறக்க முழு வேலை செய்த காங்கிரஸ் அமைச்சர் நாராயணசாமியை தன் பிறந்தநாளுக்கு தலைமை தாங்க வைப்பார்.

பெரியார் திடலுக்கு போய் வீரமணியோடு உறவாடுவார் அப்படியே போய் ஈஷா சத்குருவோடு பேட்டியில் இருப்பார். அந்நிய முதலீட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பேன் ஆனால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பேன் என்பார். மூவர் தூக்கு ரத்து செய்ய போராட்டத்தில் ஒரு பக்கம் கலந்துகொண்டு இன்னொரு பக்கம் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு பிரச்சாரம் செய்வார். இல்லாத திராவிடத்திற்கு மாற்று தமிழ்த்தேசியம் என்பார் அப்படியே யூடர்ன் அடித்து தமிழ்தேசியம் என்று ஒன்று இல்லை என்பார்.

விஜயகாந்திற்கு அம்பேத்கார் பற்றி என்ன தெரியும் என்று பேசியவர் சில வருடம் கழித்து வாழும் அம்பேத்கராக விஜயகாந்த் தெரிகிறார் என்றார். இப்படி இன்னும் ஓராயிரம் இருக்கிறது அவரின் சந்தர்ப்பவாத அரசியல். இப்படியான திருமாவிற்கு திகவினரும் திமுகவினருக்கு விட்ட ஃபயரும் சிதறவிட்ட சில்லறைகளும் கொஞ்ச நஞ்சமில்லை. இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு திருமாவை சந்தர்ப்பவாதி என பதிவிடுகிறார்கள். இதையே நாங்கள் சொல்லும் பொழுது சாதிவெறியன் என்று பட்டம் கட்டிய இந்த வெங்காயங்கள் இன்று அதே பட்டத்தை வாங்க லைனில் நிற்கிறார்கள். உபிஸ்… வாழ்க்கை ஒரு வட்டம் டே..’’ என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

அமைச்சர் பதவியைக் கொண்டு பட்டியலின மக்களுக்கு எப்படி பயன்படப் போகிறார் என்பதில்தான், திருமாவின் வெற்றி இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link