News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

டாஸ்மாக் மூலம் 1,200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க அரசு நடவடிக்கை என்ற செய்திதான் இப்போது ஹாட் டாபிக். அதாவது, ஹாட், பீர், ஒயின் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஹாட் பெட்டிகளுக்கு ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என கட்சி நிதியாக மாதத்திற்கு சுமார் ரூ.100 கோடி வசூல். அரசுக்கு வராத இந்த தொகை இனி நேரடியாக அரசு கணக்கில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த புதிய நடைமுறையால் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் விஜய் கட்சியினர் தொடர்ந்து செய்தி பரப்பி வருகிறார்கள்.

டாஸ்மாக் கொள்முதலில் ஒவ்வொரு பெட்டிக்கும் கட்சி நிதி என்ற பெயரில் முறைகேடாக வாங்கப்பட்டு வந்த பணத்தை எப்படி அரசு தனது வருமானமாக பெற முடியும்..? இவ்வளவு நாள் கட்சி நிதியாக வாங்கியிருந்தார்கள் என்றால், அது முறைகேடான மாமுல் பணம் தானே…? அப்படி வாங்கியிருப்பதை கண்டறிந்தால், அந்த சட்டவிரோத ஊழலை அம்பலப்படுத்தி, திமுக மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை தானே வாங்கித்தர வேண்டும்.

அப்படி இனி மாமூல் வாங்கப்படுவதை தடுக்க வேண்டும்… அதை விட்டுவிட்டு, அந்த மாமுல் பணத்தை, முறைகேட்டு பணத்தை இனி அரசே வாங்கும் என்பது எப்படி சரியாகும்..?. திருடர்களுக்கு வரி போடுவது போலத் தானே இது… ஒருவேளை விலையேற்றத்தை நேரடியாக சொல்லாமல், இப்படி மிகைப்படுத்தி, புனிதப்படுத்தி சொல்கிறார்களோ..? என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் ஒரு பெட்டிக்கு 90 மற்றும் பீர் கேஸ்கள் கொண்ட ஒரு பெட்டிக்கு 40 கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசின் வருவாய் உயர்வுக்கான கட்டணமாகவே பதிவாகியுள்ளது.

கட்சி நிதி என்ற சொல் அல்லது அதற்கு இணையான எந்தக் குறிப்பும் அரசாணையில் இல்லை. ஒரு அரசாணையில் இல்லாத தகவலை, “இதுதான் உண்மை” என்று கூறி பரப்புவது அரசியல் விமர்சனம் அல்ல;. ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முதலில் பரப்பிவிட்டு, பின்னர் அதையே உண்மையாகக் காட்ட முயல்கிறார்கள்.

அரசாணையில் இல்லாத ஒரு விஷயத்தை மக்களின் மனதில் இருப்பதாகப் பதிய வைப்பது தகவல் பரிமாற்றம் அல்ல; அது திட்டமிட்ட தவறான பிரச்சாரம். எனவே, பொய் பிரசாரம் செய்யும் விஜய் டீம் மீது வழக்கு போடுவதற்கு திமுக ஆலோசனை செய்துவருகிறது.

அடேநேரம் குடிமகன்களோ, மது ரேட்டைக் குறைத்து எங்களை குஷிப்படுத்துங்கள் விஜய் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

நல்ல கோரிக்கை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link