News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

எந்த அரசாக இருந்தாலும், அரசு இயந்திரத்தை தட்டிக் கேட்பவர்கள் கைது செய்யப்படுவது உறுதி என்பதற்கு சான்றாக இன்று பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து விஜய் அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் வைத்துவருகிறார். அதோடு ஆதவ் அர்ஜூனா, ரூட் மாஃபியா ஜெகதீஸ் மற்றும் பெண் அமைச்சர் லீலைகளை எல்லாம் அமபலப்படுத்தப்போவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் மாரிதாஸை, மதுரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் மின்சாரத் தட்டுப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், ‘’கடந்த ஒரு மணி நேரத்தில் 87 முறை மின்சாரம் செல்வதும் பின் லோ கரண்டாக வருவதுமாக இருக்கிறது. டேய் வீட்டில் ஒரு பொருள் மிச்சம் இருக்காதுடா இப்படி மின்சாரம் வந்தா. கரண்ட் மொத்தமா கூட நிறுத்தி போட்டு தொலைங்கடா, இப்படி power fluctuation மொத்த மின்சாதன பொருட்களையும் நாசம் செய்துவிடும்.. நடுத்தர குடும்பம் EMI போட்டு வாங்கி வச்ச பொருளேல்லாம் பழுதாகுமே என வருத்தமே இல்லாம எப்படியா எருமை மாடு மாதிரி ஆட்சி நடத்துறீங்க’’ என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர், “சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து நேற்று இரவு தொலைபேசி அழைப்பு வந்தது.. இன்று விசாரனைக்கு வருமாறு கூறினர். காரணம் என்ன! என்ன புகார் என்பதை காவலர்கள் தெளிவாக கூற வில்லை.. தாரளமாக வருகிறேன் ஆனால் என்ன காரணம் என தெளிவாக காவல்துறை கூறவேண்டும். சில நாட்கள் முன் பத்திரிக்கையாளர் ஒருவரை தனியாக அழைத்து சென்று காவல்துறை தவெகவிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக செய்தி. அப்படி எதுவும் என்னிடம் முயற்சி காவல்துறை எடுக்க வேண்டாம் என சொல்லி கொள்கிறேன்.

ஏன் என்றால் அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை.. உங்களால் என்ன முடியுமோ அதனை தாரளமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. கைது நடவடிக்கை அப்படி இப்படி எனில் அதையும் எதிர் கொள்ள தயார்… (சமீபத்தில் ஒரு பெண் மாண்புமிகு தன் நண்பர்களுடன் தம் தண்ணி அடிச்சு நடத்திய சேட்டைகள் பற்றிய தகவல் எங்கள் ஆய்வின் கிடைத்தது அதை தொட்டு இந்த கால் வருகிறது என்றால் மொத்தமாக அவமானப்பட போவது உங்கள் ஆட்சி தான்.) என்று பதிவிட்டுள்ளார்.

பெண் அமைச்சர் பற்றி தெரிவித்த கருத்து காரணமாகவே மாரிதாஸ் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவரை உள்ளே தூக்கிப் போட்டதில் ஆதவ் ரொம்ப குஷி. ஏனென்றால், அவரது குடும்பம் பற்றி இனி எதுவும் வெளியே வராது.

ஆனால் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் தவறை செய்துதான் திமுக படுதோல்வியை சந்தித்தது. அதே பாணியில் தவெக அரசு.

இதுதான் மாற்றமா விஜய்..?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link