Share via:
விநாயகர் சதுர்த்தி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (18ம் தேதி) தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால், போலீசாரிடம் அனுமதி பெற்ற பின்னரே பொது மக்கள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். விநாயகர் சிலை அமைக்கும் இடங்களின் நில உரிமையாளர்கள் உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியோரிடம் உரிய அரனமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய அறிவுரைகளின்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும என அந்தந்த காவல்மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி.சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது, நடனமாடுவது, கூச்சலிடுவது கூடாது என்றும், எந்த வகையிலான பேனர்களும் வைக்க தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரிய அளவில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பாடல்களை இசைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.