News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தகரப்பெட்டி அண்ணாமலைக்கு இவ்வளவு சொத்துக்களா..? வேட்புமனு ஏற்பு சர்ச்சை

நான் கோவைக்கு இரண்டு தகரப் பெட்டியுடன் வந்தேன் என்றும் என்னுடைய செலவுக்கு என்னுடைய நண்பர்களே செலவு செய்கிறார்கள் என்றெல்லாம் கூறிய அண்ணாமலை தேர்தல் படிவத்தில் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பு பிரமிக்க வைக்கிறது. கோவையில் அண்ணாமலை தாக்கல் செய்திருக்கும் படிவத்தில், அசையும் சொத்து 36 லட்சத்து 4100 ரூபாய் என்றும் அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாய் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மனைவி அகிலாவிடம் அசையும் சொத்துக்களாக 2 கோடியே 3 லட்சத்து 12 […]

கணேசமூர்த்தியை வைகோவும் ஸ்டாலினும் படுகொலை செஞ்சிட்டாங்க… குமரி அனந்தனின் மகள் தமிழிசையின் வாரிசு குற்றச்சாட்டு

தெலுங்கானா, புதுவை கவர்னராக இருந்த தமிழிசை செளந்தர்ராஜன் இப்போது தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். அவர் ஈரோடு ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி குறித்து வெளியிட்ட விமர்சனம் கடும் சர்ச்சையாகி வருகிறது. அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி தொடர்ந்து வாரிசு அரசியலின் கொடுமையை விளக்கி வருகிறார். அந்த வாரிசு அரசியலுக்கு கணேசமூர்த்தி பலியாகி இருக்கிறார். அவரை படுகொலை செய்திருக்கிறார்கள். அந்த படுகொலைக்கு வைகோவும், ஸ்டாலினும் பொறுப்பேற்க வேண்டும் என்று கடும் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதோடு, ‘வாரிசு […]

சீமான் பிள்ளைகள் படிப்பதற்கு தமிழ் பள்ளிக்கூடம் இல்லையா..? கடும் சர்ச்சை

சீமானின் நாம் தமிழர் கட்சியின் சின்னமான ஒலிவாங்கிக்கு அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஒலிவாங்கி எனும் மைக் சின்னத்தையும் தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார் சீமான். அந்த நேரத்தில் விருதுநகர் வேட்பாளருக்கு தமிழ் தெரியவில்லை என்று கேள்வி கேட்டதும் உடனே ஆவேசமானார். அந்த தம்பி ஓமனில் படித்தவர் என்பதால் தமிழ் தெரியவில்லை. அதற்கு இந்த நாடுதான் அவமானப்பட வேண்டும் என்றார். அதோடு நில்லாமல், என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேரும் ஆங்கில வழி பள்ளியில் படிக்கிறார்கள். ஏனென்றால், இங்கே தமிழ் […]

கணேசமூர்த்தி மரணத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு சிக்கலோ சிக்கல்

இந்த தேர்தலிலும் தனக்கு நிச்சயம் சீட் உண்டு என்ற நம்பிக்கையுடன் இருந்தவர் ஈரோட்டை சேர்ந்த ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி. இந்த முறை துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று அவரிடம் வைகோ சொன்ன நேரத்தில், ‘அப்படியென்றால் இரண்டு சீட் கேளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். ஆனால், ஒரே ஒரு சீட் அதுவும் துரை வைகோவுக்கு மட்டும் என்றதுமே கணேசமூர்த்தி மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார். தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று கடந்த 24-ம் தேதியன்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

திருமாவளவனின் பானையை உடைத்த தேர்தல் ஆணையம்… உதயசூரியனா சுயேட்சை சின்னமா..?

ஒரே ஒரு தொகுதியில் நிற்பதற்கு தனிச்சின்னம் ஒதுக்க முடியாது என்று ம.தி.மு.க.வுக்கு பம்பரம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம், திருமா இரண்டு தொகுதியில் நின்றாலும் புதிய காரணம் சொல்லி பானை சின்னத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் தங்களுக்கு பொது சின்னமாக பானை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் திருமா மனு அளித்திருந்தார், இதற்கு, ‘கடந்த 2 பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே பொது சின்னம் கோர முடியும். […]

ஓ.பன்னீர்செல்வம்னு பேர் இருந்தா 1 லட்சம் பரிசு … ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி தேடுதல் வேட்டை

எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை கிடைக்க விட மாட்டேன் என்று பன்னீர்செல்வம் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் மீண்டும் மீண்டும் புகார் கொடுத்துக்கொண்டிருக்க, ராமநாதபுரத்தில் பன்னீருக்கு எதிராக நிறைய பன்னீர்களை நிறுத்தி கெத்து காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியின் டீம் ஓ.பன்னீர்செல்வம் என்று பெயர் உள்ள நபர்களை தேடிப் பிடித்து கையில் 1 லட்சம் பணம் கொடுத்து வேட்பாளர்களாக நிறுத்தி வைக்கிறார்கள். அதன்படி, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் […]

எடப்பாடி பழனிசாமி செய்த தரமான போட்டோ சம்பவம்… உதயநிதியும் செம கலாய்

எங்களுக்கு மக்களுடன் மட்டுமே கூட்டணி இருக்கிறது. ஆனால், தி.மு.க.தான் பா.ஜ.க.வுடன் உறவு வைத்திருக்கிறது என்று பொதுமேடையில் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மோடியுடன் இருக்கும் போட்டோ காட்டி எடப்பாடி செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது. பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க. தனியே பிரிந்துவிட்டாலும், இன்னமும் உறவு தொடர்கிறது என்று தி.மு.க. மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் எட்ப்பாடி பழனிசாமி அவரது பரப்புரையில் தி.மு.க.வை கடுமையாக சாடினார். அதோடு பிரதமர் மோடியை ஸ்டாலினும் உதயநிதியும் சந்தித்துப் […]

பம்பரத்துக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்… கடும் குழப்பத்தில் துரை வைகோ

தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க முடியாது என்று தெரிவித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிடப் போகிறோம் என்று ம.தி.மு.க.வும் விடுதலை சிறுத்தைகளும் அறிவித்திருந்தன. அதன்படி இரண்டு கட்சிகளும் பம்பரம், பானை சின்னம் கேட்டிருந்தன. அதேநேரம் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ராமதாஸின் பா.ம.க. கட்சியும் அங்கீகாரத்தை இழந்த கட்சிகள் […]

விஜயகாந்த் மகன், நேரு மகன், சிதம்பரம் மகனுக்கு இவ்வளவு சொத்துக்களா..?

தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களையும் தெரிவிக்க வேண்டும். அதன்படி வெளியாகியிருக்கும் சொத்துப் பட்டியல் சாதாரண மக்களை நிலைகுலைய வைக்கிறது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரின் சொத்து மதிப்பு 17 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் பெயரில் ரூ.6.49 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.48 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன சிவகங்கையில் போட்டியிடும் பி.சிதம்பரத்தின் மகன் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரத்திற்கு 127 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. […]

ஓ.பி.எஸ்.க்கு இப்படி ஒரு சோதனையா..? எதிர்த்து நிற்கும் ஓ.பன்னீர்செல்வம்

மூன்று முறை முதல்வர், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், மிகவும் பணிவானவர் என்றெல்லாம் பெயர் வாங்கிய ஓ.பன்னீர்செல்வம் இந்த தேர்தலில் செல்லாக்காசாக மாறிவருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அ.தி.மு.க.வை மீட்பதற்கு நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி அடையவில்லை. சின்னம், வேட்டி, கொடி என எதையுமே பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தடை போட்டுவிட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட சில தொகுதிகள் வாங்கிவிடலாம் என்று நினைத்தார். வாசனுக்கு 3, தினகரனுக்கு 2 என்று கொடுத்த பா.ஜ.க. பன்னீர்க்கு ஒரே […]