News

Follow Us

நான் கோவைக்கு இரண்டு தகரப் பெட்டியுடன் வந்தேன் என்றும் என்னுடைய செலவுக்கு என்னுடைய நண்பர்களே செலவு செய்கிறார்கள் என்றெல்லாம் கூறிய அண்ணாமலை தேர்தல் படிவத்தில் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பு பிரமிக்க வைக்கிறது.

கோவையில் அண்ணாமலை தாக்கல் செய்திருக்கும் படிவத்தில், அசையும் சொத்து 36 லட்சத்து 4100 ரூபாய் என்றும் அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாய் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மனைவி அகிலாவிடம் அசையும் சொத்துக்களாக 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் உள்ளது என்று கூறி உள்ளார். 53 லட்ச ரூபாய் அசையா சொத்து அகிலாவிடம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஹோண்டா சிட்டி கார் உள்ளது. இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்று கூறியுள்ளார். அரவக்குறிச்சி: முன்னதாக 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி சட்டசபை தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் காட்டப்பட்ட சொத்து மதிப்பு இதை விட அதிகம். அதில் அவர் தன்னுடைய அசையும் சொத்தின் மொத்த மதிப்பு 46 லட்சம் ரூபாய் என்று கூறி இருந்தார். அதை விட இப்போது 10 லட்சம் குறைவாக அசையும் சொத்து உள்ளது.

தன்னுடைய மனைவியின் அசையும் சொத்து மதிப்பு 94 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அனால் மனைவியின் அசையும் சொத்து மட்டும் 100% அதிகரித்து உள்ளது. 3 வருடங்களில் 100 சதவிகிதம் மனைவியின் அசையும் சொத்து அதிகரித்துள்ளது.

கடந்த முறை அசையா சொத்துக்களாக பூர்வீக நிலமாக 76 ஏக்கர் நிலம் உட்பட பல நிலங்களை பட்டியலிட்டு உள்ளார். 1 கோடி ரூபாய் மதிப்பிற்கு இவர் நிலங்களை பட்டியலிட்டுள்ளார். தன்னிடம் அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாய் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். அதே சமயம் இவரின் மனைவிக்கு 50 லட்சம் ரூபாயில் அசையா சொத்து உள்ளதாக கடந்த முறை கூறி இருந்தார். இந்த முறை 53 லட்ச ரூபாய் அசையா சொத்து அகிலாவிடம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

அண்ணாமலை ஒரு ஏக்கருக்கு சொத்து மதிப்பை வேண்டுமென்றே குறைத்துப் போட்டுள்ளார். அவர் கொடுத்தால் ஏக்கருக்கு 5 லட்சம் கொடுத்து வாங்கிக்கொள்கிறோம் என்று பலரும் கிண்டல் செய்துவருகிறார்கள்.

அதோடு அண்ணாமலை வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

அண்ணாமலை வேட்புமனு மற்றும் மாற்று வேட்பாளர் வேட்புமனு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி இல்லை என்று தெரிந்தும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிப்பது அப்பட்டமான ஜனநாயக துரோகம் என நாம்தமிழர் கட்சியின் வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தோடு முறையிட்டு வருகிறார்கள் ! தமிழ்நாடு முழுக்க உள்ள வேட்பாளர்களின் வேட்புமனுவை இணையத்தில் பதிவேற்றிய தேர்தல் ஆணையம் அண்ணாமலை அவர்களின் வேட்புமனுவை திருத்தி தாமதமாக ஏற்றியுளது.

அண்ணாமலையின் வேட்புமனு படிவம்-26 தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ளதுபோல் இல்லை எனவும், ‘எக்ஸ்ட்ராக்ட்’ பகுதியில் அவருக்கு வாக்கு இருக்கும் தொகுதி மற்றும் நாடாளுமன்ற தொகுதியை பற்றி குறிப்பிடாமல் இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அண்ணாமலையின் வேட்பு மனுவில் குறைகள் இருப்பதாக கூறிய அதிமுக வக்கீல்கள் தேர்தல் ஆணையம் அளித்துள்ள கையேட்டை காண்பித்து கேள்வி எழுப்பினர்.

கோவை மக்களவை தொகுதிக்கு நீதிமன்ற பயன்பாட்டிற்கான முத்திரைத்தாளில் (Indian court Fee) பத்திரம் மூலம் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் அல்லாத முத்திரைத்தாளில் (Indian non judicial) மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற பயன்பாட்டிற்கான முத்திரைத்தாளை பயன்படுத்தி வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. இதனை சட்டப்படி ஏற்கக்கூடாது. இந்த முத்திரைத்தாள் பயன்படுத்தியதால் அவர் வெற்றி பெற்றாலும் அது செல்லாது என்று கூறிவருகிறார்கள்.

வேட்புமனுவில் குறைகள் சுட்டிக்காட்டிய பிறகும் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link