News

Follow Us

ஆண்களுக்கு ஸ்டாலின் பரிசு வீரன் மதுபானம்… சியர்ஸ்

டாஸ்மாக்கை மூடுவோம், படிப்படியாகக் குறைப்போம் என்று தேர்தல் நேரத்தில் மட்டும் வீரவசனம் பேசும் தி.மு.க. அரசு இப்போது ஆண்களுக்கு அட்டகாசமான பரிசு வழங்கியிருக்கிறது.

இந்த ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்காக இலவச பஸ், உரிமைத் தொகை போன்ற நிறைய திட்டங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆண்களுக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்ற ஏக்கம் இருந்தது. அதனை தணிக்கும் வகையில் வீரன் எனும் மதுபானத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

குறைந்த விலையில் சாதாரண வகை மதுபானமாக வீரன் என்ற பிராந்தி வகையை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதுதவிர 4 பீர் வகைகளுடன் புதிதாக 12 மதுபான வகைகள் விற்பனைக்கு கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இப்போது மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருப்பதால் அதிக விலை மது விற்பனை சரிந்து வருகிறது. இதனை ஈடுகட்டவே இந்த வீரன் மதுபானம் அறிமுகம் செய்யப்ப்ட்டுள்ளதாம். ஸ்டாலினுக்கு சியர்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link