News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

கைது செய்யப்பட்ட அடுத்த நாளே நீதிமன்றத்தில் பினை வாங்கி வெளியே வந்திருக்கிறார் யுடியூப்பர் மாரிதாஸ். அந்த வகையில் மாரிதாஸ் கைதில் நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டிருக்கிறார் விஜய். தன்னுடைய பவரைக் காட்டுவதற்காக கைது செய்தால் இப்படித்தான் அசிங்கப்பட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்துப் பேசும் விமர்சகர்கள், ‘’விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை சுற்றி நடக்கும் விஷயங்கள் பற்றி தொடர்ந்து வீடியோ போட்டார் மாரிதாஸ். அப்போலாம் யாரும் இவரை கைது பண்ணல. இப்போது ஆதவ் அர்ஜூனா பற்றி ஒரு வீடியோ போட்டார். அதாவது ஆதவ் அர்ஜூனாவோட நெருங்கிய உறவினர் மிகப்பெரிய கேஸில் மாட்டியிருக்கிறார் என்று வீடியோ போட்டதும் அவரை கைது செய்துவிட்டார்கள்.

பெண் அமைச்சர் பற்றி ஏஐ வீடியோ போட்டார் என்று சொல்வது வெறும் சாக்குதான். உண்மையில் லாட்டரி கும்பல் பற்றி பேசியதுதான் கைதுக்குக் காரணம். இவரது கைதுக்கு திருமாவளவன் போராட்டம் நடத்தவில்லை. தவெக ஆதரவுக் கட்சிகள் அமைதி காக்கிறார்கள்.

ஆனால், நீதிமன்றப் பிணையில் மாரிதாஸ் வந்துவிட்டார். இனி சமூக வலைதள மூன்றாம் தர பதிவுகளை தாண்டி, முக்கியமான மக்கள் பிரச்சனைகள், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆட்சியின் சீர்கேடுகள் குறித்து துல்லியமாகவும் பொறுப்புடனும் பேச வேண்டும்.

சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆட்சியை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தாமல், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இனி மாரிதாஸ் போன்றவர்கள் ஆட்சியின் தவறுகளை தொடர்ந்து வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்கள் என நம்புகிறோம்.”’ என்கிறார்கள்.

மாரிதாஸ் விவகாரத்தில் தலைகுனிவு ஏற்பட்டதை விஜய் விரும்பவில்லையாம். மீண்டும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தூக்கி உள்ளே வைக்கப்படுவார் என்பார்கள். இப்படித்தான் சவுக்கு சங்கரை விரட்டி விரட்டி ஸ்டாலின் அவமானப்பட்டார். நீங்களுமா விஜய்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link