News

விஜய்க்கு உதயநிதி, எடப்பாடி ஆதரவு. மேகதாதுக்கு 5வது தீர்மானம்

Follow Us

தனி ஒருவராய் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய விஜய்க்கு முக்கிய தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் விஜய் பிறந்த நாளில் குத்தாட்டம் போடுவது பேரதிர்ச்சியை எழுப்பியிருக்கிறது.

இன்று விஜய் பிறந்தநாளையொட்டி முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ‘’தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார். அதே பாணியில் எடப்பாடி பழனிசாமியும், ‘’விஜய் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்…’’ என்று வாழ்த்தியிருக்கிறார்.

விஜய்க்கு வைகோ முதல் கிருஷ்ணசாமி வரை அத்தனை பேரும் வாழ்த்துக்களை அள்ளி வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  இவர்கள் அனைவருக்கும் சட்டமன்றத்தில் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பள்ளிகளில் எல்லாம் மாணவர்கள்  விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் சூடு பிடிப்பது மிகப்பெரும் விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது.

நேற்றைய தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் போதையில்லா தமிழ்நாடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மராத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கிவைத்தபோது, ‘வாடி வாடி வாடி.. கைப்படாத சிடி’ என்ற விஜய் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பாடலுக்கு மாணவர்களுடன் அமைச்சர் விஸ்வநாதன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து கேட்ட நேரத்தில் அமைச்சர் வில்வநாதன், ‘’முதலமைச்சர் விஜய் அவர்களுடைய பிறந்தநாள். அவரின் பிறந்தநாளை மாணவர்களுடன் நடனமாடி கொண்டாடினோம். இது ஒரு தவறா ? இளைஞர்களும் மாணவர்களும் விஜய் பிறந்தநாள் என்பதால் மகிழ்ச்சியில் இருந்தனர். அவர்கள் அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன். முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதால் அனைவரும் சந்தோஷமாக கொண்டாடினோம். அது ஒரு தவறா ?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளை உச்சி வெயில் அடிக்கும்போது, விளையாட்டு திடலில் நடிகர் விஜய்யின் முகத்தை 3000 மாணவர்களைக் கொண்டு வடிவமைப்பு செய்திருந்தனர்.

இன்றைய தினம் பல பள்ளிகளில் மாணவர்கள் விஜய் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்கள். ஆசிரியர்கள் இதற்கு தடை போட முடியாமல் தவிக்கிறார்கள்.

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு குத்தாட்டம் போட்டு கொண்டாட வேண்டும், என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் ஆசை.

அதேபோன்று பள்ளிக்கூடத்தில் மாமியாருக்கு சோப்பு போடுவது எப்படி? பெண்களின் பின்புறத்தில் கை வைப்பது, இடுப்பை கிள்ளுவது போன்ற டெக்னிக் கற்றுக்கொடுக்கலாம்.

நல்லா வருது வாயிலே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link