Share via:
திமுக ஆட்சி காலத்தில் நெல்லை கொள்முதல் செய்யாத காரணத்தால், ரோட்டில்
வைத்திருந்த நெல் மழையில் நனைந்து வீணாகப் போனது. அதிக அளவு கொள்முதல் செய்யப்படுவதாக
திமுக கூறிவந்தாலும், மழையில் நெல் நனைவது தொடர்ந்து குற்றச்சாட்டாக கூறப்பட்டது.
விஜய் ஆட்சிக்கு வந்ததும் இந்த பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும்
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்
கும்பகோணம் அருகே சுமார் 40 ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் நெல் மூட்டைகள் திறந்தவெளி
மழை நீரில் சேதம் அடைந்துள்ளன.
இத்தனைக்கும் இது அமைச்சர் தொகுதி. அவர் போதிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம் என்கிறார்கள். இப்போது விவசாயிகளின்
உழைப்பு, வியர்வை, கனவு எல்லாம் தண்ணீரில் மிதக்கிறது. விஜய் அரசும் விவசாயிகளை மதிக்கவில்லை
என்று மக்கள் புலம்புகிறார்கள்.
ஆனால் விஜய் ஆதரவாளர்களோ, ‘’ஆட்சிக்கு வந்தவுடன் ஏந்த நடவடிக்கையும்
எடுத்துவிட முடியாது. ஆறு மாதங்களுக்கு மழை வராமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தேவையான
நடவடிக்கை எடுக்கமுடியும்’’ என்கிறார்கள்.
ஏதாவது செய்யுங்க விஜய்.
