Share via:
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் தமிழ்நாட்டிற்கு
எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் ஆனந்த் கூறிய விவகாரத்தில் எதிர்க் கட்சிகள்
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விஜய் ஆட்சியின் முதல் கூட்டத்தொடரில் முதல் வெளிநடப்பு
இன்று நடைபெற்றுள்ளது.
மேகதாது பிரச்னை தொடர்பாக பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி அனும்தி
கேட்ட நிலையில், “மேகதாதுவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பேச அனுமதிக்க
முடியாது” என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
இதையடுத்து, மேகதாது பிரச்சனை தொடர்பான உரிமை மீறல் விவகாரத்தில்
பேச அனுமதி அளிக்காத சபாநாயகரை கண்டித்து அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி
பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தார்கள்.
வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’உச்சநீதிமன்றம்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தெளிவான தீர்ப்பை ஏற்கனவே வழங்கியுள்ளது. அவ்வாறு இருக்கும்பொழுது
மீண்டும் ஒரு நடுவர் மன்றம் கேட்பது என்பது எந்த நோக்கத்திற்காக? கீழ்படுகை மாநில ஒப்புதல்
இல்லாமல் மேல்படுகை மாநிலம் காவிரி நதிநீரை தடுக்கவோ, தேக்கவோ முடியாது. இப்படியிருக்கும்
பொழுது மீண்டும் எதற்காக இந்த இடைச்செருகல் தீர்மானத்தை இந்த அரசு கொண்டு வந்தது?’’
என்று அர்த்தமுள்ள கேள்வி எழுப்பினார்.
இபிஎஸ் வெளிநடப்பு செய்த நேரத்தில் அதிமுகவைச் சேர்ந்த வேலுமணி,
நத்தம் விஸ்வந்தான் உள்ளிட்ட நான்கு பேர் வெளியே வரவில்லை. இதையடுத்து அதிமுகவில் மீண்டும்
சலசலப்பு கிளம்பியிருக்கிறது.
மேகதாதுக்கு மீண்டும் ஒரு நடுவர் மன்றம் அமைப்பது தேவையில்லாத
ஆணி என்று அத்தனை பேர் கத்தியும் விஜய் அமைதி காப்பது மர்மமோ மர்மம்.
