News

விஜய்க்கு உதயநிதி, எடப்பாடி ஆதரவு. மேகதாதுக்கு 5வது தீர்மானம்

Follow Us

இன்று சட்டப்பேரவை நிகழ்ச்சி முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் பேசும்போது முதல்வர் விஜய் மற்றும் சபாநாயகர் முகத்தை மட்டும் குளோசப் காட்டுவதும், எதிர்க்கட்சியினர் மைக் அணைப்பதும் புதிய மாற்றமாக நிகழ்ந்துள்ளன.

நேர்லை குறித்து பேசிய சபாநாயகர், ‘’சட்டப்பேரவை நடவடிக்கைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், உறுப்பினர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேரவையில் சில உறுப்பினர்கள் அவையில் உள்ள மற்ற உறுப்பினர்களை கேலி செய்யும் வகையில் முகபாவனையில் மற்றும் சைகை மொழியில் பேசியது கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது சட்டமன்ற பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் குலைக்கும் செயலாகும். இது போன்ற கண்ணில் குறைவான செயல்களில் மாண்புமிகு உறுப்பினர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்துகிறேன். இனி இத்தகைய செயல்கள் தொடர்ந்தால் அவை உரிமை மீறலாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்..’’ என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு செய்தார்.

அமோனியா வாயுக் கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியபோது, அவர்களைக் காட்டாமல் சபாநாயகர் காட்டப்பட்டார்.

அதேபோன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை முதலில் பேச அனுமதிக்காமல், 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸை விளக்கம் அளிக்க சபாநாயகர் அழைத்த புதிய நடைமுறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதாவது எந்த பிரச்னை குறித்தும் சட்டமன்றத்தில் யாரும் விவாதிக்க முடியாது. 110 கீழ் அமைச்சர்கள் பேசிவிட்டு சென்று விடுவார்கள், இதில் எதிர்க்கட்சிகள் கேள்வியே கேட்க கூடாது என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல் மேகதாதுக்கு நடுவர் மன்றம் கேட்கும் விவகாரம் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றும் செயல் என்று சொல்லப்படுகிறது. ’’மேகதாதுவுக்கு என புதிய நடுவர் மன்றம் அமைக்க கோருவது அடுத்த ஐந்து வருடத்திற்கு பிரச்சனையை தள்ளிப் போடுவதற்கும் கர்நாடகா காங்கிரசை தொல்லை செய்யாமல் அனைத்து பழியையும் மத்திய அரசின் மீதும் உச்ச நீதி மன்றம் மற்றும் சட்டத்தின் மீதும் போடுவதற்கே ஏதுவாக இருக்கும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸை நேரடியாக கேட்க முடியாமல் பிரச்சனையை தள்ளிப் போட நினைக்கிறார்கள்’ என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

அரசியலை கரைத்துக் குடித்துவிட்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link