News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

வாக்குத் திருடர்கள் என்று மோடி, அமித்ஷாவையும் தேர்தல் கமிஷனையும் ராகுல் காந்தி தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். மேடைகளில் ஓட்டுத் திருட்டு பற்றி கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கிறார். ஆனால், இவை எல்லாவற்றையும் புறம்தள்ளிவிடுகிறது தேர்தல் கமிஷன்.

நேற்று ஹரியானா தேர்தல் குறித்து பேசினார் ராகுல். ‘’வாக்கு திருட்டு மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் இதை நாங்கள் அனுபவித்திருக்கிறோம், எனவே, ஹரியானாவில் ஆழமாக ஆராய முடிவு செய்தோம்.

அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றியை சுட்டிக்காட்டின. மற்றொரு விஷயம் என்னவென்றால், ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, தபால் வாக்குகள் எண்ணிக்கை மற்றும் EVM வாக்கு முடிவுகள் ஒன்றுக்கொன்று பொருந்தாத வகையில் வெளிவந்தன வேறுபட்டன..

தபால் வாக்குகளில், காங்கிரஸ் 73 வாக்குகளும், பாஜகவுக்கு 17 வாக்குகளும் பெற்றது. எனவே, விபரங்களை ஆராயத் தொடங்கினோம். நான் தேர்தல் ஆணையத்தையும், இந்தியாவில் ஜனநாயக செயல்முறையையும் கேள்வி கேட்கிறேன், 100% ஆதாரங்களுடன். காங்கிரசின் கணிப்பு செய்யப்பட்ட மகத்தான வெற்றியை, தோல்வியாக மாற்ற ஒரு திட்டம் தீட்டப்பட்டது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

ஹரியானா முதல்வரின் புன்னகையையும், எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ‘ஏற்பாடு’ பற்றிய அவரது குறிப்பையும் கவனியுங்கள். வெளிவந்த கருத்துக் கணிப்புகள் மற்றும் குறிப்புகள், காங்கிரசை பெருமளவில் ஆதரித்த நேரத்தில், பாஜகவின் ‘ஏற்பாடு’ மீதான அவரது நம்பிக்கை வியக்கத்தக்கதாக இருந்தது. இதற்கெல்லாம் பிறகு, காங்கிரஸ், ஹரியானா தேர்தலில் வெறும் 22,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதேநேரம், ராகுல் ஏன் நீதிமன்றம் போகவில்லை என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகீறது. இதுகுறித்து பேசும் காங்கிரஸார், ‘’தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி கால சேவைகள், அதிகார நிபந்தனைகள்) சட்டத்தில் மோடி ஒரு புதிய முக்கியமான சட்ட திருத்தத்தை (2023) கொண்டு வந்தார்.

இதன் படி இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் இந்தியர் எவரும் எந்த மாதிரியான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கையும் தேர்தல் கமிஷனர்கள் யார் மீதும் தொடர முடியாது. இவர்கள் தங்கள் வேலை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள், பேசும் பேச்சுக்கள் பற்றி பணியில் இருக்கும் போதும் சரி. ஓய்வு பெற்ற பிறகும் சரி. சட்டப்படி எடுக்கவே முடியாது.

2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் இந்த சட்ட மசோதா தாக்கல் ஆன போது, 174 எம்பிக்களை அவையில் இருந்து வெளியேற்றி விட்டு அவசரம் அவசரமாக இந்த சட்ட விரோத சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது பாஜக!!! இதனால்தான், ராகுல் காந்தி மட்டுமல்ல… யாராலும் கோர்ட்டு படி ஏற முடியாது..’’ என்கிறார்கள்.

ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link