News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய் ஆட்சிக்கு வந்தபிறகே சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுமையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விஜய் கலந்துகொள்வதால் இந்த நிகழ்ச்சியை சிறுவர் முதல் பெரியவர் வரை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது ஜனநாயகப் புரட்சி என்றே பலராலும் பாராடப்பட்டது. அதேநேரம், பேரவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் சில பகுதிகளும் நேரலையினால் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையாக மாறியது. எனவே, நீக்கப்பட்ட பேச்சு இல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப புதிய நடவடிக்கைகளை விஜய் அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக செய்தித் துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘சட்டப் பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மல்டி கேமரா அமைப்பு மூலம் முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். அவற்றை தொகுத்து தொலைக்காட்சிகளுக்கு உடனுக்குடன் ஒளிபரப்புவதற்கான காட்சிகளை வழங்க வேண்டும்.

இதற்காக 2027 ஜனவரி முதல் 2028 டிசம்பர் வரை 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 160 நாட்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளைக் காட்சிப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 80 நாட்கள் வீதம் காட்சிப்பதிவு செய்யப்படும்.

நேரலையின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான ‘சைகை மொழி’ விளக்கம் கட்டாயம் இடம் பெற வேண்டும். அவையில் ஏற்படும் அமளி, விதிகளுக்குப் புறம்பான நிகழ்வுகளை திரையில் காட்டக் கூடாது. ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத்தின் பெயர், லோகோ திரையில் இடம் பெறக்கூடாது. தமிழக அரசின் இலச்சினை மட்டுமே இடம்பெற வேண்டும்.

திரையில் பேசும் உறுப்பினரின் பெயர், தொகுதி மற்றும் விவாதப்பொருள் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ‘கேப்ஷன்’ ஆக காட்ட வேண்டும். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை முழுமையாக நீக்கிய பிறகே ஒளிபரப்புக்கு வழங்க வேண்டும்.

எடிட் செய்யப்படாத முழுமையான பதிவு அரசு ஆவணத்துக்காக பத்திரப்படுத்தப்பட வேண்டும். நிறுவன ஊழியர்கள், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இனி, சட்டசபை நிகழ்ச்சிகளை மல்டி கேமரா செட்டப்பில் சினிமா பாணியில் பார்க்க முடியும். எனவே, பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள். அதோடு, அரசு நடவடிக்கைகளையும் எதிர்க் கட்சிகளின் அடாவடிகளும் நேரடியாக மக்களை சென்றடையும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link