Share via:
தமிழக முதல்வர் விஜய்க்கு இன்று ராப்டீ ஹெச்.வி. நிறுவனம் பரிசாகக்
கொடுத்த மோட்டார் சைக்கிளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார். இதையடுத்து இன்று தலைமைச்
செயலகத்தில், இந்தியாவின் முதல் ஹை வோல்டேஜ் மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான
ராப்டீ நிறுவனம், சென்னை, பெருங்குடி, ஓ.எம்.ஆர். சாலையில் நிறுவியுள்ள மூன்று தளங்களைக்
கொண்ட புதிய முதன்மை அனுபவ மையத்தைக் காணொலிக்
காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்த நிறுவனம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் 25 கோடி
ரூபாய் முதலீடு பெற்று தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வாகனத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள
எம்.ஐ.டி., குரோம்பேட்டை மற்றும் என்.ஐ.டி., திருச்சி பொறியியல் கல்லூரிகளில் பயின்ற
பொறியாளர்களால் இந்த நிருவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் டி30 என்பது இந்தியாவின் முதல் ஹைவோல்டேஜ் மின்சார
மோட்டார் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதன் மூலம்
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், மக்களுக்கு நவீன மின்சார வாகனத் தொழில்நுட்பம்,
சுற்றுச்சூழலுக்கு மாசில்லா போக்குவரத்து எனப் பல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
தொழில் முதலீடு மட்டுமில்லாமல் மக்களின் வாழ்விலும் மாற்றத்தை
உருவாக்கும் விஜய் மாடல் அரசின் புதிய சாதனையாக இந்த இவி பைக் திகழப்போகிறது.

