News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பெரியார் புத்தகத்துக்கு நூல்கள் வாங்கிய விவகாரத்தில் திமுகவின் ஊழல் ஊரெல்லாம் நாறிக்கிடக்கிறது. அகல்விளக்கு பதிப்பகம் மட்டுமின்றி விண்டேஜ் பிரஸ் லிமிடெட் என்ற பெயரில் ஆங்கில புத்தகம் கொள்முதல் செய்யப்பட்டதிலும் ஊழல் நடந்திருப்பது வெளிவந்திருக்கிறது.

அகல்விளக்கு பதிப்பகம் மூலம் பெரியார் நூலகம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு நூலகங்களிலும் மோசடி அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மட்டும், 2025 டிசம்பர் மாதத்தில் அகல் விளக்கு பதிப்பகத்தின் 2,200 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மற்ற பதிப்பகங்களுடன் ஒப்பிடுகையில், கொள்முதலுக்கான தொகையும் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.

அதேபாணியில் விண்டேஜ் பிரஸ் மூலமாகவும் ஊழல் நடந்திருப்பதாகப்  பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களைத் தொடர்ந்து விண்டேஜ் பிரஸ் லிமிடெட் பதிப்பகத்தின் முறைகேடும் தற்போது தெரியவந்திருக்கிறது.

இந்த பதிப்பகத்தின் ஒவ்வொரு புத்தகங்களின் விலையும் ₹9990 என இருந்தது.  பக்கங்களின் சராசரி எண்ணிக்கை 300. முதலில், இப்பதிப்பகம் லண்டனில் செயல்படுவதாக நூலில் குறிப்பிடப்படுகிறது. இணையத்தில் தேடினால், வலைதளம் ஒன்றும் அதே லோகோ மார்க்கில் உள்ள அதே முகவரி. அதே நூல்கள். ஆனால் வலைதளத்தில் பல கோளாறுகள் இருந்தன.

நூல்களை எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் பணம் கட்டி வாங்கும் வசதி மட்டுமே இருந்தது. லண்டனிலிருந்து இந்தியாவிற்கு ஆர்டர் செய்தாலும், பதிப்பகத்தின் அடுத்த தெருவில் ஆர்டர் செய்தாலும் ஒரே டெலிவரி கட்டணம்.

வங்கி விபரங்களோ, பதிப்பாளர் விபரங்களோ, ஆசிரியர் குழு, எழுத்தாளர் அறிமுகங்களோ இல்லை. 4முக்கியமாக பதிப்பகத்தின் முகவரி போலி. 71-75 என்றொரு நிறுவனத்தின் முகவரியை தவறாகப் பயன்படுத்தி உள்ளீடு செய்திருக்கிறார்கள்.

இந்த நூல்கள் குறித்து ஆராய்ந்தால் இந்திய ஐஎஸ்பிஎன் தள்த்தில் இல்லை.  நூலின் பின்னட்டைக் குறிப்பில் இருக்கும் எழுத்தாளரின் புகைப்படமும் போலி. இந்த விண்டேஜ் நிறுவனத்தின் 100-க்கும் மேற்பட்ட நூல்களை பெரியார் அறிவுலகத்தில் காணமுடிகிறது.

இதற்கு திமுக என்ன பதில் சொல்லப்போகிறது. படிக்கிற புத்தகத்திலும் ஊழல் செய்து என்ன சாதிக்க நினைக்கிறார்களோ..? மக்கள் விழித்துக்கொண்டார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link