News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

சினிமாவில் சக போட்டியாளர் அஜித் அம்மா மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று ஆறுதல் சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஞ்சலிக் குறிப்புடன் நிறுத்திக் கொண்டார்.

அஜித்துக்கு விஜய் கொடுத்திருக்கும் அறிக்கையில், ‘’அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்…’’ என்று கூறியிருக்கிறார்.

அதோடு, தமிழ்நாட்டில் முதல் பயணமாக கரூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருச்சிக்கு நன்றி சொல்வதற்குச் செல்கிறார். விஜய் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற காரணத்தால், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாளை மறுநாளான திங்கட்கிழமை திருச்சிக்குச் செல்வது உறுதியாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய். எம்.எல்.ஏவாக இருக்கக்கூடிய பெரம்பூர் தொகுதிக்கு நன்றி சொல்வதற்குச் செல்லாமல் ராஜினாமா செய்த தொகுதி மக்களுக்கு மட்டும் நன்றி தெரிவிக்க வருவதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களிடம் தேர்தலுக்கு வாக்களிக்கும்படி கேட்பதற்கு செல்ல வேண்டும். இந்த மக்களின் வாக்கு மீண்டும் தவெகவுக்கு வரவேண்டும் என்பதாலே, பெரம்பூர் தொகுதிக்கு நன்றி சொல்லாமல் ராஜினாமா செய்த திருச்சிக்கு நன்றி சொல்லப் போகிறாராம்.

அடேங்கப்பா, அரசியலை கரைச்சுக் குடிச்சிட்டாரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link