Share via:
அஜித் தாயார் மரணத்துக்கு த்ரிஷாவுடன் முதல்வர் விஜய் ஆறுதல் கூறச்
சென்றது சோஷியல் மீடியாவில் படுவைரலாகியுள்ளது.
விஜய் ரசிகர்களே இந்த விவகாரத்தை விரும்பாமல் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.
அதுவும், அண்ணனும் தங்கையும் ஒன்றாகப் போகிறார்கள் என்று விமர்சித்து கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
உண்மையில் அஜித்குமாருக்கு த்ரிஷா ரொம்பவும் நல்ல நண்பர். எனவே,
அவரே தனிப்பட்ட முறையிலேயே போய் பார்த்து ஆறுதல் சொல்லியிருக்க முடியும். ஆனால் முதல்வர்
விஜய்யின் கான்வாயில் ஏறிவந்து ஆறுதல் சொல்வது என்ன நாகரிகம்..? ஒரு வகையில் அடுத்து
அரசியலில் த்ரிஷாவை களம் இறக்குவதற்கு செய்யப்படும் முன்னோட்டமா என்று தெரியாமல் கொதிக்கிறார்கள்.
அதேநேரம் விஜய் ரசிகர்கள் சிலர், ‘’விஜய் த்ரிஷா உறவை நாமே களங்கப்படுத்த
வேண்டும். அவர்கள் இருவரும் அண்ணன், தங்கையாகப் பழகுவதற்கும் வாய்ப்பு உண்டு’’ என்று
கிண்டல் செய்கிறார்கள்.
இது குறித்து அரசியல் விமர்சகர்களோ, ‘விஜய்யுடன் த்ரிஷா சென்றதால்
அவரது செல்வாக்கு உயருமே தவிர, குறைவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த உறவை அவர் தேர்தலுக்கு
முன்னரே அம்பலபடுத்திவிட்டார். எனவே, இதுகுறித்து பேசுவதற்கு எதுவும் இல்லை’’ என்கிறார்கள்.
விஜய் செய்த செயலுக்கு முதன்முறையாக ஏராளமான ரசிகர்கள் கொதிப்பதைப்
பார்க்க முடிகிறது. தங்கள் தலைவர் தவறு செய்தால் தட்டிக் கேட்பது நல்ல விஷயம். இது
தொடரட்டும்.