Share via:
ஆளும் கட்சியாக இருந்தபோது பாஜக கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு
எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, இப்போது நேரடியாக அமித்ஷாவிடமே போய் சரண்
அடைந்திருக்கிறது.
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநில, யூனியன் பிரதேச தொகுதிகளின்
எண்ணிக்கையை பாஜக உயர்த்துகிறது. இது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளை
உறுதி செய்வது இது மகிழ்ச்சியான செய்தி என்று அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு கனிமொழி
பேட்டி கொடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டுவரும் தொகுதி மறு வரையறையால் ஏற்படும்
மாற்றங்கள் தற்போதைய 543 மக்களவை இடங்களிலிருந்து 50 சதவீதம் உயர்ந்து, 816 இடங்களாக
மாற வாய்ப்புள்ளது.
உத்தரப் பிரதேசம் (80-லிருந்து 120),
மகாராஷ்டிரா (48-லிருந்து 72),
மேற்கு வங்கம் (42-லிருந்து 63),
பீகார் (40-லிருந்து 60),
தமிழ்நாடு (39-லிருந்து 59),
பிரதேசம் (29-லிருந்து 43),
கர்நாடகா (28-லிருந்து 42),
குஜராத் (26-லிருந்து 39),
ஆந்திரப் பிரதேசம் (25-லிருந்து 38),
ராஜஸ்தான் (25-லிருந்து 38),
ஒடிசா (21-லிருந்து 31),
கேரளா (20-லிருந்து 30),
தெலங்கானா (17-லிருந்து 26),
அசாம் (14-லிருந்து 21),
ஜார்க்கண்ட் (14-லிருந்து 21),
சத்தீஸ்கர் (11-லிருந்து 16),
பஞ்சாப் (13-லிருந்து 20)
ஹரியானா (10-லிருந்து 15).
இவை தவிர ஜம்மு – காஷ்மீர் (5-லிருந்து 7), ஹிமாச்சலப் பிரதேசம்
(4-லிருந்து 6), உத்தராகண்ட் (5-லிருந்து 8), டெல்லி (7-லிருந்து 11), அருணாச்சலப்
பிரதேசம் (2-லிருந்து 3), கோவா (2-லிருந்து 3), மணிப்பூர் (2-லிருந்து 3), மேகாலயா
(2-லிருந்து 3), திரிபுரா (2-லிருந்து 3), சிக்கிம் (1-லிருந்து 2), நாகாலாந்து
(1-லிருந்து 2), மிசோரம் (1-லிருந்து 2), சண்டிகர் (1-லிருந்து 2) மற்றும் புதுச்சேரி
(1-லிருந்து 2). மாற்றமில்லாத யூனியன் பிரதேசங்கள்: லடாக் (1), தாத்ரா மற்றும் நகர்
ஹவேலி – தமன் மற்றும் தியூ (2), லட்சத்தீவு (1) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள்
(1) ஆகியவற்றின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை.
தமிழ்நாட்டில் புதிகாக பிரிக்க வாய்ப்புள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளின்
உத்தேசப்பட்டியல் இது. 1) சென்னை மேற்கு 2) திருவொற்றியூர் 3) ஆவடி 4) தாம்பரம் 5)
செங்கல்பட்டு 6) ஓசூர் 7) ராணிப்பேட்டை 8) வந்தவாசி 9) திண்டிவனம் 10) ஆத்தூர் 11)
ராசிபுரம் 12) கோபிசெட்டிபாளையம் 13) மேட்டுப்பாளையம் 14) பல்லடம் 15) பழனி 16) முசிறி
17) பட்டுக்கோட்டை 18) மேலூர் 19) திருச்செந்தூர் 20) கோவில்பட்டி
திமுக தமிழ்நாட்டுக்கு 50% உயர்வு வாங்கிக்கொடுத்துள்ள நிலையில்,
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி
கூறியிருப்பது மிகப்பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. எப்படியோ, தமிழகத்தில்
புதிய கூட்டணி உருவாகிவிட்டது.

