Share via:
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றிய நிகழ்வு எந்த சச்சரவும்
இல்லாமல் சுமுகமாக நடந்துமுடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட மத்திய
ரிசர்வ் படை குவிக்கப்பட்டிருந்தது. இரண்டு
தரப்பினரிடையே மோதல் உண்டாகும் என 144 தடை உத்தரவையும்* பிறப்பித்தது. ஆனால் இந்த முறை
தீபம் ஏற்றியபோது முருக பக்தர்கள் அந்த தருணத்தை கொண்டாடினார்களே தவிர, எந்தவித அசம்பாவிதமும்
நடக்கவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு சார்பில் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் அடுத்தகட்ட அறிவிப்பு நிறைவேற்றப்படுகிறது. திருப்பரங்குன்றம்
உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில், பொது மக்கள் விளக்கேற்ற இன்று முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி, நவம்பர் 29 முதல் டிசம்பர் 15 வரை உச்சிப்பிள்ளையார்
கோயிலுக்கு அருகில் மட்டும் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம்
அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நாள்களில், காலை 10 மணி முதல் மாலை
4.30 மணி வரை, பொதுமக்கள் தீபமேற்ற அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் தீபம் ஏற்றுவதில் எந்த அளவுக்கு பங்கேற்பார்கள், அவர்கள்
சிக்கந்தர் மலைக்குச் செல்வார்களா என்பதைப் பொறுத்து அடுத்த சில நாட்களில் திருப்பரங்குன்றத்தில்
கள நிலவரம் மாறலாம்.

