News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு விசித்திரமான, அதே சமயம் அதிரடியான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வெறும் ஐந்தே நாட்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14.6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை அள்ளிக்குவித்து, இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது ஒரு புதிய ‘கட்சி’. அதன் பெயர் காக்ரோச் ஜனதா கட்சி.

சமீபத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையில்லா இளைஞர்களை கரப்பான்பூச்சியுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில், அபிஜித் திப்கே என்ற நபர் இன்ஸ்டாகிராமில் காக்ரோச் ஜனதா கட்சி என்ற கணக்கைத் தொடங்கினார். அது வைரலானது. இந்நிலையில், பாஜகவின் ஃபாலோயர்களை முந்தியுள்ளது காக்ரோச் ஜனதா கட்சி.

இந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே, ” நான்கு நாட்களில் உலகின் மிகப்பெரும்க் கட்சியை விஞ்சியிருக்கிறோம். இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

30 வயதான அபிஜீத் டிப்கே. அரசியல் தகவல் தொடர்பு வகுப்பாளரான இவர், தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். புனேவில் இதழியல் படித்த இவர், 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வலராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சியின் வெற்றிக்காக, இளைஞர்களைக் கவரும் வகையில் மீம்ஸ்களை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் பிரச்சாரங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த மே 15 அன்று நடந்த ஒரு நீதிமன்ற விசாரணையின் போது, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், வேலையில்லாத சில இளைஞர்கள் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என தங்களை அழைத்துக்கொண்டு அனைவரையும் தாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டபோது, அவர்களை “கரப்பான்பூச்சிகள்” என ஒப்பிட்டதாக வெளியான செய்திதான். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

பின்னர், தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த கருத்து இணையத்தில் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. “இந்திய ஜனநாயகம் போன்ற ஒரு நாட்டில், அரசியலமைப்பின் பாதுகாவலராக இருக்க வேண்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே, இளைஞர்களின் விமர்சனங்களை இப்படி இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அபிஜீத் டிப்கே கூறியுள்ளார்.

டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலைமையாலும் ஆளுங்கட்சி எதிராக போராடும் அமைப்பாக மாறியிருக்கிறது, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இந்த வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பாஜக தடை போட்டாலும் மீறி மீறி முளைக்கிறது காக்ரோச் கட்சி

இண்ட்ரஸ்டிங்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link