News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

முந்தைய ஆட்சியில் விஜய் கூட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது 5 ஆயிரம் பேருக்கு மேல் வரக்கூடாது என்று சொல்லப்பட்டதற்கு விஜய் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இப்போது அதே கட்டுப்பாடு மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.

அதாவது கரூர் மரணத்திற்குப் பிறகு 5000 பேர் வரை மட்டுமே கூட வேண்டும் என்று காவல் துறையினர் கட்டுப்பாடு விதித்ததனர். காவல் துறையின் SOP – Standard Operating Procedure என்பதனை stalin Operating Procedure. என்று கிண்டல் செய்தனர்.

த.வெக வினர் 5000 பேர் தான் வரணுமா ? 5001 வந்தா காவல் துறை பொறுப்பேற்காதா? முதலமைச்சர் ஸ்டாலின் எங்களை பழி வாங்க துடிக்கிறார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் இன்று திருச்சியில் விஜய் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை 5000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளது. அப்படியென்றால் தமிழ்நாட்டை ஆள்வது யார்..?

நடிகர் விஜய்க்கு முதல்வர் விஜய் கட்டுப்பாடு விதிக்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதோடு, இன்று விஜய் என்ன பேசுவார் என்பதும் இப்போதே பரப்பப்படுகிறது. அதாவது, என்னை நிம்மதியா ஆட்சி செய்ய விடாமல் தடுக்குறார்கள். குதிரை பேரம் என்று பொய்யாக வதந்தி பரப்புறாங்க.

என்னால எதுவும் செய்ய முடியாம இருப்பதற்குக் காரணம் திமுக. அவங்க பண்ணிட்டு போன சிக்கலை சரி பண்ணவே சில மாதங்கள் ஆகும்‌. அதனால், என்னை நம்புங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்க என்று கேட்பார் என்கிறார்கள்.

வந்தே மாதரம் சர்ச்சை, திருவள்ளுவருக்கு காவி உடை போன்ற விஷயங்களில் வாயைத் திறக்கவே மாட்டாராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link