News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி தோல்விக்கு உயிர் விட்ட தொண்டர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதே பாணியில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் 29 வயது இளைஞன் கே.ஏ.எஸ். பூக்கடை மகேந்திரன் தற்கொலை தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.

அதிமுகவில் தேர்தலுக்கு பின் ஐற்பட்ட குழப்பம், கட்சி பிளவு போன்றவற்றை எண்ணி மனவேதனையில் இருந்த மகேந்திரன் உயிரை நீர்த்துக்கொண்டுள்ளார் அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயிரை மாய்த்துக்கொண்டார். கட்சியில் அமைச்சர், எம்.எல்.ஏ. என்று பதவி சுகம் கண்டவர்களே பதவி சுகத்திற்காக கட்சி தாவும் போது தொண்டர்கள் அதை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்,

இதுகுறித்து அதிமுகவின் ஐ.டி.விங், ‘’தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் கே.ஏ.எஸ். மகேந்திரன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். கழகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என்பது அனைத்து தொண்டர்களையும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது என்பது உண்மை தான் என்றாலும், அதற்கு இதுபோன்ற முடிவுகள் ஒருபோதும் தீர்வு ஆகாது.

தியாகம் என்ற பெயரில் எந்த ஒரு தொண்டரும் தன்னை வருத்திக் கொள்வதையோ, உயிரை மாய்த்துக் கொள்வதையோ ஒருகாலும் ஏற்றுகொள்ள முடியாது. எந்த ஒரு சோதனை என்றாலும் அதை மன உறுதியோடு எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்பதே மாண்புமிகு அம்மா அவர்கள் நமக்கெல்லாம் கற்றுத் தந்த நெறி.

அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக கழக பணி ஆற்றக்கூடிய கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், “கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்” என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் கழகத்திற்கு எதிரான சிலரின் நடவடிக்கைகளால் இன்று ஒரு தூய தொண்டரை நாம் இழந்திருக்கிறோம். இது அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி. இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம்…’’ என்று பதிவு வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் தாயாரின் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க பொள்ளாச்சிக்கு செல்ல இருந்த நிலையில் கழகத்திற்காக தன் இன்னுயிரை நீத்த கே.எ.ஸ்.பூக்கடை மகேந்திரன் அதிமுக அவர்களின் மறைவு செய்தியை அறிந்து அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக பொள்ளாச்சி பயணத்தை ரத்து செய்துவிட்டு கும்பகோணத்திற்கு விரைகிறார் எடப்பாடி பழனிசாமி.

என்ன காரணம் என்றாலும் இது ஒரு மோசமான முன்னுதாரணம். இதை எந்த அரசியல் கட்சிகளும் ஊக்குவிக்கக்கூடாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link