News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் புயல் வீசப்போகிறது. விரைவில் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தனிக் கட்சி அவசியம் இல்லை, புதிய இயக்கம் தொடங்கி தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாக்க இருப்பதாகவும், அடுத்த நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இது அரசியல் கட்சியாக மாறும் என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்துப் பேசும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘’தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த அண்ணாமலை, தனது நேரடி பேச்சு, தரவுகளுடன் கூடிய விமர்சனங்கள், “என் மண் என் மக்கள்” போன்ற மக்கள் தொடர்பு பயணங்கள் மூலம் தேசிய ஊடகங்களிலும் இடம்பிடித்தார். தமிழக எல்லைகளைத் தாண்டி அவரது பெயர் அறியப்பட்டதும், கட்சிக்குள் அவரை ஒதுக்கும் முயற்சிகள் தொடங்கின. இதன் விளைவாக, தமிழகத்தில் உருவாகியிருந்த வாக்கு வங்கி வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும், கட்சி தனது முன்னேற்ற வேகத்தை இழந்துவிட்டது.

அண்ணாமலை ஒரு தனிநபர் மட்டுமல்ல; தமிழகத்தில் பாஜக வளர்ச்சியின் அடையாளமாக மாறியிருக்கிறார். அவரை புறக்கணித்துவிட்டனர். எனவே, இனியும் அண்ணாமலை சுமா இருக்கப்போவதில்லை.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இதையடுத்தே அண்ணாமலை மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு எதிராக கடுமையான அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை அவருக்கும் பாஜக மேலிடத்துக்கும் இடையேயான ஆழமான விரிசலை வெளிச்சமிட்டது. கட்சியின் அடிப்படை கொள்கைகளிலேயே முரண்பாடு ஏற்பட்டதால், மேலிடம் போதிய ஆதரவு கொடுக்காததால் அண்ணாமலை தனக்கென தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்ய முடிவு செய்துவிட்டார்.

தனிக்கட்சி தொடங்கும் திட்டத்துடன் அண்ணாமலை அதிரடியான முதல் கட்ட நடவடிக்கையையும் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து பூத் அளவில் ரகசிய வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அண்ணாமலையின் திட்டம் மிகவும் தீவிரமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

ரஜினிகாந்த் மட்டுமின்றி, தமிழகத்தின் பல முக்கிய தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் மற்றும் சில அரசியல் தலைவர்களும் அண்ணாமலைக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

இந்த ஆதரவு அவரது புதிய அரசியல் பயணத்துக்கு பெரும் பலத்தை அளிக்கும். அண்ணாமலையின் இந்த முடிவு பாஜகவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்திய முக்கிய முகங்களில் ஒருவரான அண்ணாமலை இனி மாற்று சக்தியாக மாறுவார்…’’ என்கிறார்கள்.

அதேநேரம், அண்ணாமலை முதலில் தனியே இயக்கம் தொடங்குகிறார். அதனை விரைவில் அறிவிப்பார். இந்த இயக்கத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்கிறார்.

கட்சியோ, இயக்கமோ சீக்கிரமா ஆரம்பிங்க பாஸ்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link