சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்! பா.ஜ.க.வின் நிலை என்ன?

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை (நவ.18) கூடும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்த […]
கந்தசஷ்டி விழா! திருச்செந்தூருக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கம்!

கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 13ம் தேதி கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளநிலையில் முக்கிய நிகழ்வான […]
மோசமடைந்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோத பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் திடீரென்று நெஞ்சுவலிக்கிறது என்று கூறியதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு இருப்பதாக தெரிவித்த நிலையில் இதனை இ.எஸ்.ஐ.மருத்துவர்களும் உண்மை […]
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தலைமை செயலாளர் உத்தரவு!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக மேகநாத ரெட்டி கூடுதல் பொறுப்பு வகித்திருந்த நிலையில் தற்போது பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐ.எ.ஏஸ்.சை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை […]
கிணற்றில் சடலமாக மிதந்த கல்லூரி மாணவர்! திருப்பத்தூரில் அதிர்ச்சி!

தீபாவளி பண்டிகையின் போது மாயமான கல்லூரி மாணவர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், புங்கம்பட்டு நாடு ஊராட்சி, கல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான வேடி என்ற இளைஞர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த மாணவர் வேடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது தீபாவளி பண்டிகையின் போது திடீரென்று மாயமாகியுள்ளார். […]
சென்னையில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது! முழு விவரம் உள்ளே!

சென்னையில் கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை (நேற்று) மொத்தம் 588 பேர் திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பல்வேறு குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு […]
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.1,999.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை தற்போது ரூ.57 குறைந்து ரூ.1,942க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது ரூ.57 குறைக்கப்பட்டுள்ளது பொது மக்கள் மற்றும் ஓட்டல் […]
அதிவிரைவு ரெயிலில் திடீர் தீவிபத்து! 19 பேர் காயம்!

உத்தரபிரதேசத்தில் டெல்லி – சஹர்சா வைசாலி அதிவிரைவு ரெயிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 19 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் எட்டவா அருகே சென்று கொண்டிருந்த டெல்லி – சஹர்சா வைசா அதிவிரைவு ரெயிலின் எஸ்.6 பெட்டியில் இன்று அதிகாலை 2.12 மணியளவில் திடீரென்று புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த ரெயில் ரெயில் மெயின்பூரி சந்திப்புக்கு முன்பாக […]
நாளை உருவாகும் புயல்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் நாளை புயல் உருவாக உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பதிகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மாறி தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதற்கிடையில் காற்றழுத்த […]
ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையும் விஜயசாந்தி! பா.ஜ.க. மீது அதிருப்தி!

தேர்தலில் சீட் கொடுக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி நாளை காங்கிரசில் இணைய உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தெலுங்கானாவில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி அதனுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கிடையில் பா.ஜ.க. தனது 100 வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்ததால் அங்கு தேர்தல் களம் மற்றும் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. […]

