Share via:
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1,999.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை தற்போது ரூ.57 குறைந்து ரூ.1,942க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது ரூ.57 குறைக்கப்பட்டுள்ளது பொது மக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை அதிகரித்ததால் சில ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், தற்போது விலை குறைப்புக்கு பின்னர் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.