News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பொறுப்பை உணர்ந்து அடங்கி இருங்கள்! ஆளுநருக்கு முதல்வர் எச்சரிக்கை!

இன்றைய சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவிதான். இருந்தாலும் இருக்கும வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு அடங்கி செயல்பட வேண்டும் என்றும் தனது பொறுப்பை உணர்ந்து அடங்கி இருப்பதே நலம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று  (நவ.18) சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, […]

தனுஷ் மகனுக்கு அபராதம் விதிப்பு! போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

நடிகர் தனுஷின் மகன் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்ட பழகிய காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி அபராதம் விதித்துள்ளனர்.   நடிகர் தனுசுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனுசும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது இல்லம் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஆர்15 ரக பைக்கை ஓட்ட போயஸ் […]

மின்சாரமின்றி உயிரிழந்த 24 நோயாளிகள் பலி! காசாவில் பதற்றம்!

மின்சாரமின்றி தவிக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காசாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என பாரபட்சமின்றி இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் காசாவை விட்டு வெளியேறிய நிலையில் எஞ்சியுள்ள மக்கள் உயிரை கையில் […]

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற சிறப்புக்கூட்டத் தொடரை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.   தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் இருந்து ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய விளக்கங்கள் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.   அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்புக் கூட்டம் […]

22 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! சென்னையில் பரபரப்பு!

போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னையில் 22 போலீசாரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   சென்னையில் பெருகிப் போயிருக்கும் போதைப் பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போதைப் பொருட்கள் புழக்கம் தொடர்பாக எழுந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு […]

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூலகம்! நாளை தொடக்கம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூலகங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் பெயரில் இயங்கி வரும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் அதன் நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.   அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூலகங்களை திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை […]

அதிரடியாக உயர்ந்த தேர்வுக்கட்டணம்! மாணவர்கள் கடும் அதிர்ச்சி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவீதமாக அதாவது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி இருப்பதால் ஒவ்வொரு மாணவரும் ரூ.2,050 கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டிகிர பெறுவதற்கான கட்டணம் ஏற்கனவே ரூ.1,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,500 ஆக  அதிகரித்துள்ளது. இறுதியாண்டு […]

கல்லூரி மாணவர் ரேகிங் விவகாரம்! 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ராகிங் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலான நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.     ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த […]

திருவண்ணாமலையில் நாளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை அறிவிப்பு!

தமிழக அரசை கண்டித்து நாளை (நவ.18) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.   குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை கண்டித்து விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்குமுறையை பா.ஜ.க. […]

கலைஞர் நூற்றாண்டு விழா! ரஜினிகாந்த், கமலுக்கு அழைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு தமிழ் திரையுலக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.   அரசியல், தமிழ் சினிமா என பன்முகத்தன்மை கொண்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘கலைஞர் நூற்றாண்டு விழா’வுக்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.   அதன்படி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாக […]