கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம்!

சென்னையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. வருகிற 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான பணியை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளது. அதன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் […]
குட்நியூஸ்! மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை அறிவிப்பு!

மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை டிசம்பர் 11ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை நடத்தப்படும் என்று அட்டவணையில் […]
வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை! ராமநாதபுரத்தில் பரபரப்பு!

10ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தில் 15 வயதான தீபக் என்ற மாணவன் கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளியில் தூக்கில் தொங்கியபடி மாணவன் தீபக் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சகமாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். ஆசிரியர்கள் கொடுத்த தகவலையடுத்து விரைந்து சென்ற கடலாடி […]
விஜயகாந்திற்கு செற்கை சுவாசம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தே.மு.தி.க. தலைவரும் நடிகரும் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிப்பில் இருந்தும் கட்சிப்பணியில் இருந்தும் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வெளிநாட்டிற்கும் சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா தலைமையில் கட்சியின் அனைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. […]
ரூ.2 லட்சம் பரிசு பெற்ற ‘நீர்க்கொல்லி’ புத்தகம்! ப.சிதம்பரம் வழங்கினார்!

‘சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு’ வழங்கும் விழாவில் ‘நீர்க்கொல்லி’ புத்தகத்துக்கு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசாக வழங்கப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று (நவ.19) கடந்த 2022ம் ஆண்டுக்கான ‘சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு’ விழா எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர் ஷாராஜ் எழுதிய ‘நீர்க்கொல்லி’ நாவல் சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசை ப.சிதம்பரம் மற்றும் கவிஞர் வைரமுத்து […]
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு! தற்காலிக நிறுத்தம்!
உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணத்தை தற்காலிக நிறுத்தி வைப்பதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவீதமாக அதாவது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி இருப்பதால் ஒவ்வொரு மாணவரும் ரூ.2,050 கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் டிகிரி பெறுவதற்கான கட்டணம் ஏற்கனவே ரூ.1,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,500 […]
1.3 லட்சம் ரசிகர்களுக்காக இதை செய்வோம்! பேட் கம்மின்ஸ்!

நாளை மைதானத்தில் கூடும் 1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று ஆஸ்திலேரிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாளை மதியம் 2 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் […]
மதி அனுபவ அங்காடி கட்டிடம்! அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடி கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் […]
இன்று கூடிய சட்டமன்ற சிறப்புக் கூட்டம்! புதிய தகவல்கள்!

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத போதிலும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மிகவும் சோர்வாக காணப்பட்ட முதலமைச்சர் மக்கள் நலப்பணியே முக்கியம் என்று உரை நிகழ்த்தி தீர்மானங்களை நிறைவேற்றியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டமசோதாக்களை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு நிறைவேற்றி மீண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட […]
மீண்டும் நிறைவேறிய 10 மசோதாக்கள்! சட்டமன்றத்தில் அதிரடி!

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்று சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 13ம் தேதி தமிழகத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் […]

